சுந்தர பூமியென்று
சுற்றிப் பார்க்கையிலே அதன்
அந்தரங்கம் கண்டு
அந்தரித்துப் போனேன்
விந்தையான மனிதர்கள்
சிந்தையெங்கும் சின்னத்தனம்
நிந்தித்து மற்றவரை
நித்தமும் மகிழ்பவர்கள்
முதுகெலும்பு உள்ளதனை
முற்றிலும் மறந்தவர்கள்
பசுத்தோலைப் போர்த்திக் கொண்ட
பயங்கரமான நரிகள்
![]() |
Add caption |
அந்தரிக்கும் வேளையிலும்
அடைக்கலம் கொடுக்க
அகம் இல்லா உறவுகள்....
இன்னும் எத்தனையோ....
மூச்சு இரைக்குக்குதடா இவர்
மதியின்மை எண்ணுகையில்....
இதை சுவர்க்க பூமியென எண்ணி
இன்னமும் எம் மண்ணில் காத்திருக்கும்
சகோதரனே சகோதரியே ...
அங்கு இருக்கும் வரையில் தான்
இங்கிருக்கும் உந்தன்
அண்ணனுக்கும் மாமனுக்கும் சித்தப்பனுக்கும்
அன்பான உறவு நீ...
அதையே பெரிதாக நம்பி
இங்கு வந்து விட்டால்....
நடுத்தெருவில் நின்றாலும் உன்னை
ஏனென்று கேட்க யாரும் வரார்
ஏனென்றால்... அவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல
அவர்களும் கூட இங்கே
இயந்திரங்கள் தான்...
Tweet | |||