Tuesday, 23 October 2012

உண்மையாய் உயிர் வாழ்ந்தேன் உன்னால் சில நிமிடம்...

சில நாட்களாய் என் உயிர்
சீரழிந்து துடித்தது உன்னால்..
ஒரு வார்த்தை சொன்னாய்..
உண்மையாய் உயிர் வாழ்ந்தேன்
உன்னால் சில நிமிடம்...
சொல்ல வார்த்தை இல்லையடா-அந்த
நிமிடத்தின் பெறுமதியை.. ஆனாலும்
என்னை விட்டெறிந்து சென்றாய்
வந்த உயிர் பறித்து...
நிறைந்தாய் என் நெஞ்சுக்குள்
நேசமுள்ள சகோதரனே
நீ நீடு வாழ்வாய்!!!

23:57Aravind.S
sorry
i am very sorry
please dont curse me
i apologize
for behaving bad
you are like my sister
sorry
forgive me
I mean it
God bless you
i sincerely apologize

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Friday, 19 October 2012

நாகரீக விபச்சாரம்!!!

நட்புமில்லை அன்புமில்லை
நடுவினிலோர் ஆசை என்றாய்
கற்றவன் என்பதனால் உன்
காமத்தை நாசூக்காய் சொன்னாய்
கட்டினவன் குழந்தைகளிருந்தாலும்
கர்மம்.. அந்த ஆசைக்கு
எல்லையில்லை என்றாய்
இதயத்தை அறுத்துப் பார்க்கும் உனக்கு
இரத்தமும் சதையும்தான் தெரியும்
எத்தனை காயங்கள் ஊமையாய்
சத்தமின்றி வலிப்பது அறியாய்...
இணையத்தில் இணைந்துவிட்டால் உன்
இதயம் தவிக்கிறது காமம் பேச...
நெஞ்சம் வலிக்க சொல்லுகிறேன் நண்பா-இது
நாகரீக விபச்சாரம்!!!

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Wednesday, 10 October 2012

கனவு கேளடி தோழி...

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!