நிசப்த விலங்குகள் நினைவுகளைச் சிறையிடும்
காரிருள் நெஞ்சுக்குள்
கடூரமாய்த் துளையிடும்...
பிரிவும் துயரும் இதயத்தைப்
பிரித்துப் பிரித்து மேயும்
தாரையாய் விழிநீர் சொரிந்து
தலையணை தெப்பமாகும்
இதயம் விரும்பும் சிறையிருக்க..
விழிகள் விரும்பும் விடுதலையை..
நீண்டுவரும் பரிதிக் கரங்கள்..
நிரந்தரமற்ற தீர்வுடனே..
| Tweet | |||