பாசத்தவிப்பு.....
பாதி நாட்கள் கனவில்
என்
பாலகர்கள் வருகிறார்கள்...
பார்த்துப் பார்த்துகேட்கிறார்கள்...
அம்மா...
பத்து மாதம் சுமந்தாயாமே..
எப்படியம்மா என்னை
விட்டுப் போனாய்...
அப்படி நான் பிழை
என்ன செய்தேன்...
அடுத்தவள் கேட்கிறாள்....
படுக்கையிலே காய்ச்சலாகி
படுத்தேனே அம்மா...
பரிவோடு வருடிய கரங்கள்...
அவை உன்னுடையவை இல்லையே...
பாலூட்டும் போது அணைத்தவளைப்
பார்த்தேன்
அதுவும் நீயில்லையே
அம்மா..
தடுக்கி விழுந்து
அம்மா என்றழுத போது
தழுவ நீ வருவாய் என
நினைத்தேன்... வரவில்லையே...
உன் அருகாமையே எனக்கு
மறந்து விட்டதே..
பாசமா???? அள்ளியணைத்து
முத்தமிட முடியாமல்
இருக்கும் உனக்குள் அது இன்னும் பசுமையாய் இருக்குதாம்மா????
மொத்தத்தில் நாங்கள்
உன்
அணைப்புக்காக ஏங்குவதை
எப்போது முடித்துக்
கொள்வாய்....
அம்மா என்று வாய்
நிறைய அழைக்கும் போது
அள்ளியணைக்க எப்போது
வருவாய்...
அம்மா...அம்மா...அம்மா...
அழுகுரல் என் காதுகளைக்
கிழிக்கிறது...
குழந்தைகளுக்குப்
புரியாதது.. என் உணர்வுகளா..
அல்லது...
எனக்குப் புரியாதது
அந்தப் பிஞ்சுகளின் ஏக்கங்களா...
ஆண்டவா உம்மைத் தான்
கேட்கிறேன்...
அடுக்குமா இந்தப்
பழி உமக்கு...
பதில் சொல்லுங்கள்...
இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!
Tweet | |||
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!