இறைவன் படைத்த ஆறே...
அதன் அழகிய நீரே என்
இதயத்துடிப்பை அறியமுடியவில்லையா
இறைவன் படைத்த மரமே அதன்
அழகிய முக்கனியே
என் இதயத் துடிப்பை அறிய முடியவில்லையா...
இறைவன் படைத்த பூமியே அதன்
மேலுள்ள வானமே
என் இதயத் துடிப்பை அறியமுடியவில்லையா
இவை எல்லாவற்றையும்
படைத்த இறைவா நீர்
என் இதயத்துடிப்பை அறிந்துள்ளீர்
இதற்காக உமக்கு ஸ்தோத்திரங்கள்....
(இது என் மகன் அனங்கன் -வயது 9 எழுதிய கவிதை.. குழந்தை கவிஞ்னாய் உருவாகும் அவனைப் பெருமையோடு அறிமுகம் செய்கிறேன்... )
இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!
Tweet | |||
ReplyDeleteவணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
இனிய வணக்கம் சகோதரி பூங்கோதை...
ReplyDeleteஅழகிய கவிதை...
குழந்தைகள் மனதில் உள்ளதை
அப்படியே சொல்வார்கள் என்பது
எவ்வளவு உண்மை பார்த்தீர்களா.
கவியும் அழகு...
குழந்தையின் பெயரும் அழகு...
அன்பு வணக்கம் பூங்கோதை.
ReplyDeleteஅனங்கன் அருமையான பெயர். அவருக்கு வயது 9. இந்த வயதில் இப்படி ஒரு திறமை..
எனக்கு உடலும் உள்ளமும் சிலிர்க்கிறது கோதை. நிச்சயமாக ஒரு பெரிய எதிர்காலம் அவருக்கு இருக்கு. கடவுள் தந்த ஒரு அரிய பரிசு அனங்கன் உங்கள் மகனாகக் கிடைத்தது.
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் மனம் நிறைந்த இனிய நல் வாழ்த்துக்கள்!
நினைத்துப்பார்க்க முடியாத கற்பனை வளம்.மிக சிறிய வயதில்.கவிதையின் நடையும் முடித்த விதமும் ஒரு கலைக்குடும்பத்தின் வாரிசு என்பதனை தப்பாமல் சொல்கிறது. சும்மாவா சொன்னார்கள் கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteநினைத்துப்பார்க்க முடியாத கற்பனை வளம்.மிக சிறிய வயதில்.கவிதையின் நடையும் முடித்த விதமும் ஒரு கலைக்குடும்பத்தின் வாரிசு என்பதனை தப்பாமல் சொல்கிறது. சும்மாவா சொன்னார்கள் கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி நெற்கொழுதாசன்.. :)
ReplyDeleteஒன்பது வயதில்... அருமை. வாழ்க வளமுடன்.
ReplyDeleteகவிதையை அருமையாக மகன் தீட்டியிருக்கின்றார் வாழ்த்துக்கள் நல்ல கவிஞன் எதிர்காலத்தில் என்பதை9 வயதிலேயே நிரூபிக்கின்றான் !
ReplyDelete@ தனிமரம்/// பாராட்டுக்கு நன்றி.. நண்பரே...
ReplyDelete