உயிர்வலியெடுப்பிலும்
உதிரச் சொரியலிலும்
உருவாகிய கனவுகள்
விடைபெற்றுக் கொள்கின்றன
வலியினை மட்டும் விட்டு விட்டு...
இருளிலிருந்து தூக்கப்பட்டு
கறுப்பு வர்ணத்தை மட்டுமே
வாழ்வின் பரிசாய் கொண்டு
வாழும் இதயங்களோடு இதயமாய்
துடித்துக் கொண்டு தான் இருக்கிறது
பிறந்து விட்டதற்கான தண்டனையாய்....
Tweet | |||
கறுப்பு
ReplyDeleteதுக்கம், துயர அடையாளமுமல்ல
வெள்ளை
சுத்தம், சுக அடையாளமுமல்ல
நிறங்கள்
பார்வைக்கு அழகாக இருக்கட்டும்
நிறங்களுக்கு
பொருள் கற்பிக்க வேண்டாம்
தன்னம்பிக்கை தான்
எம் வலிகளைப் போக்கிட
நல்ல மருந்து என்பேன்!
வணக்கம் சகோதரி...
ReplyDeleteதங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.
வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_22.html
நன்றி
வாழும் இதயங்களோடு இதயமாய் துடித்துக் கொண்டு தான் இருக்கிறது பிறந்து விட்டதற்கான தண்டனையாய்....
ReplyDelete