Monday, 10 December 2012

இரவுகள் இரப்பதெவை?....

உயிரின் தாகம் தீர்க்கும்
உறவின் நாதத்தை...
உலர்ந்த விழிகரைந்து
உவர்க்கும் சோகத்தை...
உச்சி வான் வெளியின்
உறைந்த இருள் நீக்கும்
உயிர்ப்பின் ஒளியதனை...
உடுக்கள் மிளிர்கின்ற
உயர்ந்த வானத்தை...
உணர்வின் வலி போக்கும்
உரத்த நிவாரணியை...
எதுவும் இல்லையெனிலும்
எப்படியோ கழிகின்றன
எனக்கு வேண்டாத இரவுகள்..
எப்படியும் மறுநாள்
எழுந்திடுவேன் என்ற நம்பிக்கையில்...

12 comments:

  1. முதல் வணக்கம் ... அழகான கவிதை.. நல்ல படைப்பு...

    //எப்படியும் மறுநாள்
    எழுந்திடுவேன் என்ற நம்பிக்கையில்...
    ////

    ஹா..ஹா..ஹா... நித்திரையில் சுனாமி/பூகம்பம் வராவிட்டால் சரிதான்...:)))

    ReplyDelete
  2. ///ஹா..ஹா..ஹா... நித்திரையில் சுனாமி/பூகம்பம் வராவிட்டால் சரிதான்...:)))///வாங்கோ அதிரா... ம்ம்ம் உதுகள் வ்வாறதெண்டால் நித்திரையிலயே வந்துட்டா நல்லம் எண்டு தான் பாக்கிறன்....
    வரவுக்கு நன்றி.. :)

    ReplyDelete
  3. ///ஐ.. மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ:))///
    மனித வாடையே இல்லாமல் இருந்த கருத்துப்பெட்டிக்குள்ள கனநாளைக்குப் பிறகு இண்டைக்குத்தான் மியாவுடைய குரலாவது கேட்குது.. நீங்க வேற..

    ReplyDelete
  4. ”எப்படியோ கழிகின்றன
    எனக்கு வேண்டாத இரவுகள்..” எனக்கும்தான்...

    ReplyDelete
  5. ///எனக்கும்தான்.../// என்ன விச்சு அண்ண.. இப்படி சொல்லிட்டீங்க.. கூல் டௌன்...

    ReplyDelete
  6. நித்தமும் புது விடியலுக்காக நாம் காத்திருக்க விடியல் பழைய விடியலாகவே எப்போதும்...விடியும் ஒருநாள் நமக்கும் நம் விதிக்கும் புது விடியல் விடியும்...நம்புவோம் !

    வாழ்த்துகள் கோதை !

    ReplyDelete
  7. ஒவ்வொரு விடியலும் நம்பிக்கையுடன் தான் விடிகின்றது!ம்ம் அருமையான கவிதை!

    ReplyDelete
  8. திரட்டியில் இணையுங்கோ சகோ!

    ReplyDelete
  9. முகநூல் விட அதிகம் திரட்டியில் கருத்துடன் வருவார்கள் நல்ல வாசகர்கள் சகோ!

    ReplyDelete
  10. வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஹேமா...
    அத்துடன் `தனி மரம்` உங்கள் முதல் வரவுக்கு நன்றி.. திரட்டியில் இணக்கலாம் தான்.. முயற்சிக்கிறேன்.. உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி

    ReplyDelete
  11. நம்பிக்கையில் அழைக்கிறது என் வரவை உங்கள் வரிகள் சிறப்புங்க.

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!