Sunday, 9 December 2012

என் செல்ல வாயாடி...



என் இரண்டாவது பெண் யாகவி...

அவளுடைய சுட்டித்தனங்கள் என்று சொல்வதை விட.. அவர்கள் பேசும் பெரிய விசயங்கள் இருக்கே.. கொஞ்சம் அதிகமாவே தெரிந்தாலும் நான் வாயில் விரலை வைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இதுவரையும் பல விடயங்களை மறந்துட்டேன்.. ஆனால் இன்னைக்கிருந்து அவ பேசுற இந்த வாயாடித்தனமான பேச்சுக்களைப் பதிவு செய்யப் போறன்... எதுக்கு என்று கேட்கிறீங்களா? இந்த குழந்தைத் தனம் அவர்கள் வளர்ந்த பின்னர் அவர்களுக்கே இரசிக்கும்படியா இருக்கும்... அப்போ அவங்க படுற வெட்கத்தை நாங்களும் கண்டு இரசிக்கலாமில்ல...

இண்டைக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஸ்கைப்பில் தொடர்பு கொண்டேன்...

புது ட்ரெஸ் எடுத்திருக்கா..அதையெல்லாம் என்னட்ட காட்டினா. அதோட கலர் பற்றி பேசினோம்.. என்ன கலர் பிடிக்கும்  என்று கேட்டேன்.. எல்லாம் லைற் கலரா சொன்னா..

பிங்க் பிடிக்கும், வெளிர் நீலம், மெல்லிய பச்சை.. என்று சொல்லிட்டே போனா..

சரி எந்தக் கலர் பிடிகாது என்றதுக்கு படக்கென கருப்பு நிறம் பிடிக்காது என்றா.. 

உடனே நான் சொன்னேன் வளர்ந்ததும் கருப்பு மாப்பிளையைத்தான் கட்டித் தருவேன் என்று..

உடனே சொன்னா பாருங்க...

எனக்கு கருப்பு மாப்பிளையும் வேணாம் ஒண்ணும் வேணாம் என் அத்தான் `சாம்`ஐக் தான் 

கட்டித் தாங்க எண்டாள்...

சிரிப்பு அடக்கமுடியாமல் அடக்கிக் கொண்டே கேட்டேன்..’’ 
அதுக்கு அத்தை ஓம் எண்டு சொல்ல வேணுமே.. ஓமெண்டுவாவா?” என்று கேட்டேன்..
 5 வயசுப் பொண்ணுங்க... என்ன சொல்லுச்சுன்னு தெரியுமா?

அது எனக்குத் தெரியுமா? நீங்க தான் கதைக்க வேணும்... இப்ப நீங்க முடிவெடுக்கிறீங்களா இல்ல 

நான் முடிவெடுக்கவாண்ணு... ஹையோ.. ஹையொ... இதுக்கு மேல என்னால அடக்க முடியாம 

சிரிச்சு சிரிச்சு களைச்சிட்டேன்...

அப்படி ஒரு வாயாடிங்க..ஆனால் என் சிரிப்பைக் கண்டு அவ வெட்கப்படல்ல... தன் அத்தானைப் 

பற்றிப் பேசும் போது நான் சிரிச்சுட்டேன் என்று என்னுடன் கோபித்துக் கொண்டு எழுந்து 

போய்ட்டா.. பிறகு அவளை சமாதானப்படுத்தி கூப்பிட 5 நிமிசமாச்சு...


இதுங்களையெல்லாம் எப்படி வளர்க்கப்போறேனோ ஆண்டவா.....

 ****

அதற்கு முந்திய வாரம் (இரண்டு வாரங்களுக்கு முன்) பேசிய போது என்ன பேசினான்னா...

அவளது அக்கா முறையான பிள்ளை எங்கள் வீட்டில் பரீச்சைக்காக வந்து நின்று படிக்கிறாள். 

அவள் என் மகளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போயிருக்கிறா.. அப்படிப் போகும்போது யாரோ 

இரண்டு பையன்கள் சைக்கிளில் பின் கரியரில் இருந்த என் மகளைப் பார்த்து (சின்னப் பெண்ணை 

சீண்டலாம் என் நினைத்துப் போல...) கண் அடித்திருக்கிறார்கள்.


உடனே அக்காவிடம் சொல்லியிருக்கிறாள்... ”நான் இனிமேல் சைக்கிள்ல வரமாட்டேன்.. இந்தப் 


பெடியங்கள் கண் அடிக்கிறாங்கள்..” என்று.. அக்கா அதைப் பற்றிக் கேட்க அவள் 

சொல்லியிருக்கிறாள்... ”எனக்கு அவங்களைத் தெரியும்... ஒருத்தன் கறுப்பு மற்றவன் வெள்ளை... 

நான் இப்பவே பொலீசில போய் சொல்லப் போறன் எண்டு..”.


அப்பாடா.. என் பொண்ணு பொழைச்சிக்குவா... என்ன சொல்றீங்க?? J



இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?...

4 comments:

  1. ஹா ஹா ஹா கண்டிப்பா உங்க பொண்ணு பொழைச்சுக்குவா பூங்கோதை! அருமை/ அருமை! படிச்சு படிச்சு நானும் சிரித்தே விட்டேன் :)

    ReplyDelete
  2. மச்சான் "சாம்" நிலைமையைத் தான் நினைக்க எனக்கு சிரிப்பாய் இருக்கு.எலேய் குட்டிப்பையா இப்பவே அலேட்டாகிடுடா .................

    ReplyDelete
  3. ///மச்சான் "சாம்" நிலைமையைத் தான் நினைக்க எனக்கு சிரிப்பாய் இருக்கு.எலேய் குட்டிப்பையா இப்பவே அலேட்டாகிடுடா ............../// ஹா...ஹா.. நன்றி நெற்கொழுதாசன்

    ReplyDelete
  4. ///மச்சான் "சாம்" நிலைமையைத் தான் நினைக்க எனக்கு சிரிப்பாய் இருக்கு.எலேய் குட்டிப்பையா இப்பவே அலேட்டாகிடுடா ............../// ஹா...ஹா.. நன்றி நெற்கொழுதாசன்

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!