வணக்கம் என் நட்பு நெஞ்சங்களே..
இண்டைக்கு என்னுடைய பதிவு ஒரு கதையாகவோ, கவிதையாகவோ இல்லாமல் இது ஒரு நன்றி நவிலல் பதிவாகவும் ஒரு அறிமுகப்பதிவாகவும்
சமைத்திருக்கிறேன்...
சுவைத்துப் பாருங்க...
இந்தப் பதிவை
எழுதுவதற்குத் தூண்டுகோலாக
அமைத்து அதிராவின்
'என் பக்கத்தில்' பதிவிடப்பட்ட நன்றி நவிலல் பதிவு தான். அதற்காக அதிராவுக்கு முதற்கண் என் நன்றிகள்.
'என் பக்கத்தில்' பதிவிடப்பட்ட நன்றி நவிலல் பதிவு தான். அதற்காக அதிராவுக்கு முதற்கண் என் நன்றிகள்.
என்னுடைய வலைப்பூ
2008ல் ஆரம்பித்திருந்தேன்.
அது ஒரு
தனிக் கதை.
அந்தக் கதையை
நான் இன்னுமொரு
தனிப்பதிவாக எழுதி வெளியிடலாம்
என்று நினைக்கிறேன்...
2008ல்
இருந்து இந்த
வலைப்பூவை நம்ம
அறிவுக்கேற்ப ஏதேதோ
நம்மளால முடிஞ்சதை
நோண்டி நோண்டிக்
கண்டு பிடித்து,
அதை வடிவமைத்து
வைத்திருந்தேன். இதற்கு அடிப்படை உதவி செய்தவர் பிலிபைன்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு ஏணஸ்ற் குவாரா அவர்கள். அவருக்கும் இந்த நேரத்தில் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
அதற்குப்பிறகு
2009ன் இறுதிப்
பகுதியில் தம்பி
யாதவனை வைத்து
சிறு மாற்றங்கள்
செய்தேன், யாதவன்
(kavilavan.blogspot.com) தன்னுடைய
நேரத்தை எனக்காக
ஒதுக்கி சிறு
மாற்றங்களை செய்து
தந்தார். அதுக்கப்புறமும் இன்னும் ஏதோ
மாற்றம் செய்ய
வேணும் எண்டு
2010ல் நண்பன்
சந்துருவைக் கேட்டேன்.
தன் வேலைப்
பழுவுக்குள்ளும் அவரும்
தன்னால் இயன்றதை
வடிவமைத்து தந்தார்.
அந்தப்படியே கடந்த
வாரம் வரையும்
ஓடிட்டு இருந்துச்சு...
ஆகவே.. முதல்ல
தம்பி யாதவனுக்கும்,
நண்பன் சந்துருவுக்கும் இந்த வேளையில
என் நன்றிகளைச்
சொல்லிக்கிறேன்..
நன்றி... நன்றி...
நன்றி...
ஆனாலும் எனக்கு
என் வலைப்பூவைப்
பற்றிய ஒரு
கற்பனை இருந்துச்சு..
அதை அப்படியே
வலைப்பூவில் அமைக்கிறதெண்டால்..
கணனித் தொழில்நுட்பம் என்றாலே ஞானசூனியமான
என்னால்...எப்படிங்க...???
ரெண்டு மாசமா
இதே யோசனை..
ப்ளாக் சீரமைச்சு ரொம்ப நாளாச்சா..... பதிவை ப்ளாக்கில்
போடுற போதெல்லாம்,
பாழடைஞ்ச வீட்டுக்குள்ள கால் வைக்கிற
மாதிரி... அப்படி
ஒரு ஃபீலிங்...
என்ன பண்ணலாம்...
யார் மாட்டுவா???
அப்டீன்னு நெனைச்சிட்டிருக்கிறப்போ தான்
நம்ம நண்பன்
மாட்டினாரு...
தமிழ் நண்பர்கள்தளத்தில என்
படைப்புகளைப் பதிவு
செய்றப்போ என்
படைப்புகளைப் பற்றி
பின்னூட்டம் போடுவாரு..
அப்புறம் என்
படைப்புகளுக்கு தமிழ்
நண்பர்கள் தளத்தில்
பரிசு கிடைச்சப்போ
அது தொடர்பாக
எனக்கு மின்னஞ்சல்
அனுப்பினாரு.. இந்த
வடிவங்களில் ஆரம்பிச்ச
நட்பில், பின்னர்
முகநூல் நண்பராகவும்
ஆகிவிட்டார்..
யாருன்னு இன்னும்
புரியலையா...? தமிழ்
நண்பர்கள் தளத்தில்
‘அட்மின்’ இவர்
தானுங்க... வினோத்
கன்னியாகுமாரி... தன்னோட
ஊர் பெயரைத்
தன் பெயரோடு
எப்போது சுமந்திட்டே
திரிவதில் ஒரு
தனி சுகம்
அவருக்கு...
ஒரு நல்ல
பதிவாளன் என்பதோடு
எனக்கு ஒரு
நல்ல நண்பன்
என்று சொல்வதிலும்
பெருமைப்பட்டுக்கிறேங்க.. ஆனால்
என் நண்பன்
ஆனதுக்காகப் படாத
பாடு படுத்திட்டேன்...
ஃபேஸ்புக்லயே சாட்டிங்க்ல
நான் சொல்லச்
சொல்ல என்
விருப்பப்படியே வலைப்பூவை
வடிவமைச்சாரு.. Background மட்டும்
ஒரு பத்து
பதினைஞ்சு தடவை
மாத்தி மாத்திப்
போட்டு காட்டி.... நான்
இது தான்
எனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கப்புறம் தான்
அதை நிரந்தரமாக்கினார்..
அட.. Background க்கே
இப்படின்னா.. டைட்டில்,
அப்புறம் டைட்டிலின்
பின்னணி, அப்புறம்
Layout இப்புடி ஏகப்பட்ட
டார்ச்சர்.. அவருடைய
தள வேலையோடு
பிஸியா இருக்கும்
போதும். இப்பிடி
பண்ணிக் கொடுங்க,
அப்படிப் பண்ணிக்கொடுங்கண்ணு எதைக் கேட்டாலும்
“சரி..” என்ற ஒற்றைப்பதில்
வந்து கொண்டிருந்தது..
டவுட்டு வந்து
நானே ஒரு
தடவை கேட்டேன்.. “எப்படி இப்படி..
ரொம்ப நல்லவரா
இருக்கீங்க”ன்னு
... அதுக்கும் வந்தது
ஒரே ஒரு
ஸ்மைலி.. J .. இப்ப
நான் என்ன
சொல்ல வர்ரேன்னு
புரியுமே... அதிகமா
பேசமாட்டார்... ஆனால்
எல்லா சந்தர்ப்பத்திலயும் இப்புடி பேசவே
மாட்டர்ன்னெல்லாம் நெனைச்சிடாதீங்க....
ஏதாவது விவாதம்
வந்துச்சுன்னா... பக்கம்பக்கமா
பேசித்தள்ளிடுவார்... கமலஹாசனின்
‘விஸ்வரூபத்தில்` நம்ம
ரெண்டுபேருக்கும் கத்திக்
குத்து மட்டும்
தான் நடக்கல...
அப்படி ஒரு
சண்டை... சொல்ற
கருத்தில உறுதியா
நிப்பாரு...
இப்படியான ஒரு
நல்ல நண்பன்
செய்த உதவிக்கு
அவருக்கு நான்
தனிப்பட்ட விதத்தில்
நன்றி சொல்லியிருந்தாலும்,
அதிராவின் `என்
பக்கத்தில்` பதிவிடப்பட்டிருந்த அந்தப்பதிவு... என்னையும்
ஈர்த்துடுச்சு... அதான்...அப்படியே
அந்த ஐடியாவைக்
காப்பி பண்ணி...
இந்தப் பதிவு
பிறந்திடுச்சு...
இது பெரிய
உதவிங்க... ஏன்னா... முதலாவது
எனக்கு தொழில்நுட்பம் தெரியாது, அடுத்தது,
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் (எதிர்பார்த்தாலும் எதையுமே செய்யக்கூடிய
நிலையில நான்
இல்லையே..) செய்தாரு...
அதுவும் நான்
அவருக்கு ஒரு
உறவினரோ, அல்லது
நீண்டகாலம் பழகிய
நட்போ, அல்லது
ஒரே ஊர்க்காரரோ,
ஒரே நாட்டுக்காரரோ இல்லைங்க... எந்த
விதத்திலும் அவர்
எனக்கென நேரம்
செலவழிக்கப் போதுமான
காரணமே இல்லை எனும்போது,
அவர் செய்த உதவி
மிகப்பெரியது...
So, I would like
to thank my friend
Mr.Vinoth -Kanniyaakumari
:)
:)
எனக்காக உங்க
நேரத்தை செலவழித்துச்
செய்த உதவிக்காக
மிக்க நன்றி
வினோத்..
இந்த வேளையில..
அவருடைய எழுத்துப்பணி
சிறக்கவும், அவருடைய
தமிழ் நண்பர்கள்
தளம் இன்னும்
சிறப்புற வளரவும்
வாழ்த்துகிறேன்..
இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!
Tweet | |||
அட.அட. என்ன சொல்லுறதெண்டே தெரியேலை கோதை உங்களின் நன்றி உணர்வை....:)
ReplyDeleteஅருமையான அற்புதமான நண்பர். இப்படித் தன்னலமற்ற உதவிசெய்யும் மனநிலை சட்டென எல்லாருக்கும் வராது. உண்மையில் அவரின் இந்தப் பெருந்தன்மை இல்லாத தன்மையை நினைக்கும்போது எனக்கும் ஆச்சரியமாக பெருமையாக இருக்கு.
இதை நல்லவிதமாக இங்கு எம்முடன் பகிர்ந்த உங்கள் மனநிலையும் சிறப்பானதே.
உங்கள் அன்பு நண்பர் விநோத்திற்கு எம் மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
இதை எம்முடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் மிக்க நன்றி கோதை!
உதவி செய்பவர்களை என்றும் மறக்ககூடாது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteம்ம்.. அதுவும் இப்படியான இக்கட்டில் ஒரு பிரதிபலனும் பாராமல் உதவுகிறவர்களை மறக்க முடியாது அண்ணா.. வாழ்த்துக்களுக்கு நன்றி.. :)
Deleteஆவ்வ்வ்வ் ஒரே நன்றி சொலும் பதிவாகவே இருக்கே பூங்கோதை.... அதில என் பெயரும் இருக்கா அப்படியே ஷொக்ட் ஆகிட்டேன்ன்ன்ன்:).. ஹையோ மீ என்ன அப்படிச் சொல்லிட்டேன்ன்ன்....
ReplyDeleteஎன் பெயரையும் சொன்னமைக்கு மியாவும் நன்றி.
உங்களுக்காக உதவிய அனைவருக்கும்.. பாராட்டுக்களும் நன்றிகளும்.
புளொக் அழகாக இருக்கு. எமது வீடெனில் அங்கு முக்கியமா அன்பு பாசம் நிறைந்திருப்பின் மட்டுமே உள்ளே போகத் தூண்டும், இல்லையெனில் வேலையிலேயே அதிக நேரம் இருந்திடலாமோ எனத்தான் மனம் எண்ணும்.
அதுபோலவே புளொக் அழகாக, அதிலும் எம்மனதுக்கு பிடித்திருந்தால் மட்டுமே அதிகம் பதிவெழுதத் தூண்டும்.
ஆங்... அதிரா.. ஸ்வீட் 16.. வாங்கோ வாங்கோ... இந்தப் பதிவுக்கு முன்னோடி நீங்க தான்.. (இது மட்டுமில்ல.. இன்னும் உங்ககிட்ட கொப்பி பண்ணக்கிடக்கு.. அதையும் இப்பவே சொல்லிடுறன்... ஹா..ஹா..)
Deleteம்ம்.. உண்மைதான்.. இந்த ப்ளொக்கை சீர் திருத்தமுடியாமல் மிகவும் மனவருத்தத்தில் இருந்தேன்.. இப்போ தான் எனக்கு இதுக்குள்ள வரவே குளிர்ச்சியா இருக்கு.... (அதான்..டைட்டிலுக்க ஆறு ஓட விட்ருக்கோம்ல... :)))
வரவுக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி அதிரா...
What a nice looking blog, and with many visitors from lots of different countries! Wish I could read more but still nice to look at. All the best, hope you are staying positive and happy :)
ReplyDeleteThanks Christine.. :)
DeleteIt's all your encouragements.. Thanks a lot.. :)
ப்ளாக் மிக அருமையா இருக்கு பூங்கோதை! முக்கியமா ஹெடர் மிக மிக அழகா இருக்கு! இதனை அழகாக வடிவமைத்த நண்பர் வினோத்துக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மணி..
Deleteதங்கள் வாழ்த்தை நண்பன் வினோத்துக்கும் தெரிவிக்கிறேன்..
வணக்கம் பூங்கோதை அவர்களே
ReplyDeleteஎன்னால் முடிந்த ஏதோ ஒரு சின்ன உதவியை நேரம் கிடைத்த போது செய்தேன். இதில் பெரிதாக சொல்ல ஏதும் இருப்பதாக தெரியவில்ைல. இதற்கு இந்த அளவு பெரிய நன்றியையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. இதைவிட மிகவும் உதவும் நல்லெண்ணம் கொண்டோர்கள் எத்தனையோபேர்கள் இருக்கிறார்கள்.
தங்கள் நன்றி மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்கள் எழுத்துகளும் எண்ணங்களும் மேன்மேலும் வளர்ந்து புகழ் பெறட்டும்.
நன்றி.
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth
ஆவ்வ்வ்வ்.. வாங்க வினோத். என் நன்றியை ஏற்றுக் கொண்டதற்கும் பின்னூட்டத்துக்கு நன்றி வினோத்.. :)
Deleteதமிழ் நண்பர்கள் தளம் இன்னும் சிறப்புற வளரவும் வாழ்த்துகிறேன்.
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி..
Deleteபடிக்கறதுக்கு ரம்மியமா எழுதறீங்க பூங்கோதை. அதை பார்க்கறதுக்க அழகா வடிவமைச்சுத் தந்த நண்பரை அறிமுகம் செய்வித்து நன்றி சொன்ன விதம் அருமை! ந்ன்றி சொல்லுகிற நல்ல பண்பை கண்டு மிகமிக மகிழ்ந்தேன்.
ReplyDeleteபாராட்டுக்களுக்கு மிக்க நண்றி அண்ணா!
Delete