கண்கள் அக்கிரமம்
கண்டும்
மூடிக் கொள்கின்றன.......
காட்சிகளைக் கண்களுக்குள்
படமாக்கி
கண்ணீரில் கழுவிப்
பின் உலர்விக்கின்றன
தவிப்போடு என் நாவு
பேச எழுந்து
துடித்துப் பின் துவழ்கிறது..
முறுக்கேறி என் கரங்கள்
முயல்கின்றன ஏதோ ஒன்றை.....
எல்லாமே தோற்றுப்
போகின்றன..
நான் தமிழச்சி என்பதால்...
முள்வேலிக்குள் முடங்கிப்
போகிறேன்..
பேசினால் ஒருவேளை
அது தான்
என் இறுதிப் பேச்சு....-
இது
கோழைத்தனம் என்று
எனக்குள்
குறுகிப் போகிறேன்....ஆனாலும்
இன்றே நான் அழிந்து
விட்டால்..
எனக்குள் சேமித்து
வைத்திருக்கும்
நம்மவர் தியாகங்களும்..
நம் இனத்தின் அவலங்களும்
என் சந்ததிக்கு யார்
பகிர்வார்...
ஆனாலும்
குமுறி எழுகின்ற யாவையும்
கொட்ட முடியா வேதனை...
பிரசவிக்க முடியாக்
கருபோல்
பேரவலமாய் உள்ளிருந்து
எழும்
மரண வலியோடு நான்......
அன்பான ஆர்வலரே.. உங்கள் தமிழ்மண வாக்குப் பதிவுகளுக்காக இங்கே கிளிக்குங்க..
அன்பான ஆர்வலரே.. உங்கள் தமிழ்மண வாக்குப் பதிவுகளுக்காக இங்கே கிளிக்குங்க..
Tweet | |||
கேள்விற்கான பதிலும் உங்களிடமே உள்ளது...
ReplyDeleteஅச்சம் தவிர்...
நன்றி சகோ. ஒரு உயிரையிட்டு அச்சம் தவிர்க்கலாம்.. ஆனால் இந்த அச்சம் தவிர்ப்பால் பல உயிர்களுக்குப் பாதகம் என்றால்??? ஏனென்றால் நாம் தமிழர்கள் அல்லவா?? ஒருவருடைய சொல்லுக்காக ஒரு சந்ததியே விசாரிக்கப்படுவது தான் எமக்கான நீதி.. :(
Deleteபெருகிவழியும் உணர்வுகளின் ஒட்டு மொத்த தவிப்பு - உங்கள் கவிதை பூங்கோதை!
ReplyDeleteஉண்மை தான் மணி.. உணர்வுகள் அடக்கப்படல் என்பது பெரும் கொடுமை..
Deleteகருத்திடலுக்கு நன்றி மணி
ஆவ்வ்வ்வ் தமிழ்மணத்தில் பார்த்தே இங்கு வந்தேன் கோதை...
ReplyDeleteவாங்கோ அதிரா... தமிழ்மணத்தில பார்த்தெண்டாலும் நீங்க வந்ததே சந்தோசம் தான்...
Deleteநான் போட்டதுபோல் லிங்போடுங்கோவன்.. வோட் பண்ண...
ReplyDeleteஉதெல்லாம் எனக்கு சொல்லித் தரவேணும் அதிரா.. அது உங்களுக்குத் தெரியாதோ.. நான் உந்த விசயத்தில ஜீரோவாக்கும்..
Delete//நான் தமிழச்சி என்பதால்...
ReplyDeleteமுள்வேலிக்குள் முடங்கிப் போகிறேன்..
பேசினால் ஒருவேளை அது தான்
என் இறுதிப் பேச்சு....-//
ஆஹா நல்ல அழகான கற்பனை....
ம்ம்.. கற்பனை இல்லை அதிரா..இது உண்மையான உணர்வுதான்.. :(
Deleteஉணர்வுக் கவிதையில் முற்றிலும் உணர்வுகள் தழும்பி நிக்குது கோதை... நல்ல கற்பனை.. பொருத்தமான படமும்கூட.
ReplyDeleteகருத்திடலுக்கு மிக்க நன்றி அதிரா.. :)
Deleteஉங்களின் வேதனை புரிகிறது
ReplyDeleteபுரிதலுக்கும் கருத்திடலுக்கும் நன்றி! :)
Deleteஉணர்வுமிகுந்த கவிதை கோதை...
ReplyDeleteபிரசவம் நிகழும்.
பிள்ளையும் தாயும் சவமாக ஒருபோதும் நம் தோழர்கள் விடமாட்டார்கள்.
காலம் சற்றுத் தாமதமாகலாம்.
கனியும் கைவசம் வரும்.
துயரகற்று! துணிவுகொள்!...
தேற்றும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி இளமதி!
Deleteஉணர்வுகள் பொங்கி வழிந்திருக்கின்றன தங்கச்சி. என்னால் நன்குணர முடிகிறது. எனினும் எனக்குச் சொல்லத் தோன்றுவது ஒன்றே - இதுவும் கடந்து போகும். காலம் ஒரு நாள் நிச்சயம் மாறும். நம்பிக்கை ஒன்றையே கைக்கொண்டு அடுத்த தலைமுறையை உருவாக்கும்வோம்! -சரியாம்மா?
ReplyDelete