Wednesday, 6 February 2013

சுவாச வ(ளி)ழிப்பயணம்

களித்திடும் காதல் எழில் நடனம்- விழி

துளிர்த்திடும் உனக்குள் நான் சரணம்
தளிர்க்கரம் தழுவிட மூழ்கும் கணம் -உன் சுவாச
வளி வழிப்பயணம் இதயம் தொடும்.....

ஊழி தன் சாகசம் காட்டவென்றோ
பாழுமோர் பிரிவைப் போட்டதன்றோ
ஆழியும் மலையும் மேடும் நம்மிடையே-உன் சுவாச
வளி வழிப்பயணம் தொலைந்து போச்சே..

குளிர்வாடை நெஞ்சுக்குள் தீ வீசும்
எழில் மலரும் என்மீது மூள்ளாய் உரசும்
ஒளிக்கதிர்கள் எரிகற்கள் என வீழும்-உன் சுவாச
வளி வழிப் பயணம் தேடி இதயம் வேகும்




இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

5 comments:

  1. உண்மைதான் கோதை... சுவாச வளி(ழி)ப் பயணம் விபரிக்க முடியாத ஒன்றே. பிரிவின்போது அதன் வலியும் உணர்ந்தாலன்றி விபரிக்க முடியாத ஒன்றுதான்.
    அருமையாக உணர்வின் வெளிப்பாடை வெளிப்படுத்தினீர்கள். திறமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அனுபவங்களே உணர்வுகளின் அடித்தளமாக இருக்கிறது... வாழ்த்துக்களுக்கு நன்றி இளமதி.. :)

      Delete
  2. உன் சுவாச
    வளி வழிப் பயணம்.......

    வலிப் பயணமாய் இருந்துவிடாமல் இருக்கட்டும்

    தொடருங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. ஊக்குவிப்புக்கு நன்றி ஆத்மா... :)

      Delete
  3. ///களித்திடும் காதல் எழில் நடனம்- விழி
    துளிர்த்திடும் உனக்குள் நான் சரணம்///

    என்னை கவர்ந்த அருமையான வரிகள்...

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!