அன்பு தாயிடம் உள்ளது
அன்பு தந்தையிடமும் உள்ளது
ஆசிரியரிடமும் அன்பு உள்ளது
இவர்கள் அனைவரும் இருப்பதால்தான்- நாம்
இவ்வளவாக வளர்ந்துள்ளோம்...
-அனங்கன் -
இந்த முறை கவிதை சுமாராகத்தான் எழுதியிருந்தான்.. ஆனால் முதலெழுத்துக்கள் ஒன்றிவர எழுதியிருந்தது அவன் கவிதையைப் பயிற்சி செய்கிரான் எனப் புரிய வைக்கிறது. அதோடு இன்னொரு ஆச்சரியம் கேளுங்க...அண்ணா கவிதை சொல்லுவதைக் கண்டதும் குட்டி யாகவிக்கு தானும் கவிதை ஒன்று சொல்லி அம்மாவிடம் பாராட்டு வாங்க வேண்டுமென்று ஆசை வந்து விட தானும் கவிதை சொல்லுகிறேன் என்று ஓடி வந்தாள்... அட.. ஐந்து வயதான இவளுக்கு எங்கே கவிதை வரப் போகிறது என்று எல்லோருக்கும் ஒரே சிரிப்பு... ஆனால் சொன்னா பாருங்க கவிதை... அப்படியே அம்மாவை (என்னைத் தானுங்க..) சந்தோசத்துல பறக்க வைச்சிட்டுது... நீங்களும் பாருங்களேன்....
கவிதையிலே நான் பிறந்து
கவிதையிலே நான் தவழ்ந்து
கவிதையிலே நான் வளர்ந்து
கவிதையிலே என் அன்னையைத்
திருப்தியாக்குவேன்...
-குட்டி யாகவி-
இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!
Tweet | |||
கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடும் :)
ReplyDeleteநன்றி சாது... :)
Deleteபூங்கோதை!
ReplyDelete‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா’
உங்கள் செல்வங்களுக்கு நிச்சயம் ஆச்சரியப்படத்தக்க எதிர்காலம் உண்டு.
உங்களுக்கும் உங்கள் செல்வங்களுக்கும் என் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
வாங்க இளமதி.. நன்றி...உங்கள் வாழ்த்துக்களுக்கு... பூனைக்கு புலிகள் பிறத்திருக்கோ எண்டு பயந்துட்டிருக்கிறேன்... நீங்க வேற.. அவ்வ்வ்
Deleteகுட்டிக் கவிதை அருமை
ReplyDeleteநன்றி கவியாழி.. :)
Deleteகுட்டி கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி விச்சு அண்ணா.. :)
Deleteஅனங்கன், யாகவி இருவரது கவிதைகளும் அசத்தல்! இரண்டு செல்லக் குட்டிகளுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவளரும் பயிரை முளையிலே தெரியும் என்பார்கள்!
தெரிகிறது!!
வாழ்த்துக்களுக்கு நன்றி மணி.. :)
Deleteவிளையும் பயிர் முளையிலேயே தெரிகிறது.
ReplyDeleteமுறையான பயிற்சியும் ஊக்குவிப்பும் தந்திடுங்கள் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும்.
குட்டி கவிகளுக்கு என் வாழ்த்துகள்.
நிச்சயமாக ஊக்குவிக்கிறேன்...வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கேசவன்
Delete