Thursday 20 June 2013

எனக்குள் விசேசித்தவன்!


பாலகனைப் போல் பரிசுக்கடை முழுதும்
பரவி அலையும் என் விழிகளுடன்
உனக்கான ஒன்றைத் தேடி என்
உள்ளத்தை உணர்த்தும் பரிசு எதுவென்று
இயற்கையை  ஊடறுத்து தேடுகிறேன்
ஏதேனும் கிடைக்குமா என்று!
நிச்சயமற்ற  பயணத்தின் முடிவில்
மிச்சமாகின்றன  பெருமூச்சுக்கள்  மட்டும்!
பூச்செண்டுகளும் புதுமைப் பொருட்களும்
பேச்சிழந்து  போகின்றன என் பேராசை கண்டு  - எனக்குள்
நீச்சலடிக்கும்   உன்   நினைவுகள் மட்டும்
நியாயத்தைப் புரிந்து கொள்ளும்
நீ எனக்குள்   விசேசித்தவன் என்பதை...

நட்புடன் 
பூங்கோதை

24 comments:

  1. Replies
    1. வாங்க தம்பி, நலமா ? கன நாளா காேணல...
      வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி....

      Delete
  2. பாலகனைப் போல் பரிசுக்கடை முழுதும்
    பரவி அலையும் என் விழிகளுடன்.... அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. என் கவிதையை ரசித்து இட்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  3. விசேசித்த வரிகள் விவேகத்தை காட்டியதே
    யோசித்து நீதேடிய புதையல் கிட்டியதா
    சுவாசிக்கிறாய் நினைவுகளை எப்போதும்
    நேசிக்க நேசிக்க நெருங்கிடும் விரைவினிலே...

    அருமையான கற்பனை. அழகு கவிதை மகளே!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அம்மா வாங்க... நலமா?... யோசிச்சு யோசிச்சு என் மண்டை தான் பழுதாச்சு... :)) புதையல் எதுவும் கிடைக்கல ...

      Delete
    2. இப்பதான் தமிழ் மணம்(2) சேர்த்துவிட்டிருக்கிறன் மகள்...:)

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாலன் அண்ணா ...

      Delete
  6. அழகுத் தமிழ் கவிதை! அள்ளியது என் மனதை!

    ReplyDelete
  7. விசேசிப்பு... இது புதுச்சொல் எனக்கு. அப்படியெனில் பிரவேசிப்பதா கோதை?

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா... நலமா?
      விேசஷம் என்ற சொல்லு தெரியாதா? அதைத்தான் வட எழுத்தைப் புறக்கணித்திட்டு சொல்லை மட்டும் திருடி எனக்கேற்ற மாதிரி வளைச்சிருக்கி றேன்... (ரொம்ப அநியாயம்ல... :)) )

      Delete
  8. எனக்குள்
    நீச்சலடிக்கும் உன் நினைவுகள் மட்டும்
    நியாயத்தைப் புரிந்து கொள்ளும்
    நீ எனக்குள் விசேசித்தவன் என்பதை...
    ///

    அச்சச்சோ நினைவுகளுக்கு தெரியும் நியாயம்.. மனிசருக்கு புரியுதில்லையே:).... அழகிய குட்டிக் கவி அழகு.

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா... ஏனென்டால் அவை என் நினைவுகள் எல்லோ... அதுசரி.. உங்களை நான் கன நாளா தேடித்திரியிறன்... எங்க கண்டு பிடிக்கிறதெண்டு தெரியேல்ல....

      Delete
    2. மீ இங்கதான் இருக்கிறேன் கோதை.. இங்க..இங்க.... ஹா..ஹா...ஹா...:))).. இன்னும் ”இந்தாட்டிக்கா” போகல்ல..:)).. உடுப்பு அடுக்கி முடிச்சால்தானே போகலாம்:)).

      Delete
    3. இந்தாட்டிக்காவுக்கு அவ்ளோ உடுப்பா கொண்டு போறீங்க... :))
      அதிரா உங்களிடட்ட ஒரு அட்வைஸ் (பேஸனல்) கேட்கணும்... அதான்... எப்படி தொடர்பு கொள்றதுன்னு தெரியல...

      Delete
  9. ஹீஈஈஈ! ம்ம்ம்!எனக்குள்
    நீச்சலடிக்கும் உன் நினைவுகள் மட்டும்
    நியாயத்தைப் புரிந்து கொள்ளும்
    நீ எனக்குள் விசேசித்தவன் என்பதை...
    ///ம்ம்ம்ம்ம்!நானும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனி மரம்... தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.. கருத்திடலுக்கு மிக்க நன்றி.. இணையத்துக்கு அடிக்கடி வரமுடியல..புரிதலுக்கும் என் நன்றிகள்...

      Delete
  10. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  11. வணக்கம் !
    இன்று உங்களை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் ,அதற்க்குத்
    தங்களின் வருகையைத் தெரிவியுங்கள் .மிக்க மகிழ்ச்சி எனக்கும் தங்களை
    இங்கே அறிமுகம் செய்யக் கிடைத்த வாய்ப்பிதற்க்கு .
    http://blogintamil.blogspot.ch/2013/07/2_24.html

    ReplyDelete
  12. அந்த ‘விசேஷித்தவன்’ யாரோ, அவனுக்கு நன்றி-இப்படியொரு நல்ல கவிதை வரக் காரணமாயிருந்தானே, அதனால்! – நிய்யுஜெர்சியிலிருந்து க்விஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete
    Replies
    1. என் கவிதையை இரசித்துக் கருத்திட்டதற்கு மிக்க நன்றி சகோ.

      Delete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!