தோழி... நினைவுச் சுழலுக்குள் அவ்வப்போது நுழைந்து கொள்கிறாய்.... நிர்மூலமாக்கப்பட்ட என் கனவுகளில் நிலவாக இடையிடையே.... கன்னக் குழி விழக் கதைகள் சொன்னதும்- உன் மென்னகைக்குள் என் இரசனைச் சிறகுகள் மெல்லப் புதைந்ததும்.... சின்னாபின்னமாய்ப் போன நினைவுகள்.... சின்ன இதயத்தை சிறுகச் சிறுகக் கொல்லும் கிராதகர்கள்... எப்படி முடிந்தது உன் சிவந்த மேனியைக் குதறித் தள்ள... சட்டித் தொப்பிக்குள் சாக்கடையின் உறைவிடம் தட்டிக் கேட்க நாதியின்றி நாணிக் குறுகி தலை குனிகிறேன்... தணலாக தகிக்கிறது குருதி தோய்ந்த நிலவு...