Friday 22 October 2010

அன்புக் கரம்....

தாரை தாரையாய் வடியும் விழி நீர்
தரையே சகதியாகிறது...
நிமிர்ந்து பார்க்கிறேன்
உலகம் சிரித்துக் கொண்டிருக்கிறது..!!!
தன் கால்களுக்கடியில் நான்
தளர்ந்து கிடப்பது தெரியாமல்...
மீண்டும் கவிழ்ந்து போகிறேன்
விம்மலும் வேதனையும்
நெஞ்சைப் பிளக்க..
மீண்டும் விழி நீர் திரள ...
உச்சியின் கேசங்களை ஊடறுக்கும் மெல்லிய வருடல்...
மயிர்த்துளைக் குழாய்களுடே...
மெல்லிய அன்பு அலைகளைப் பரவ....
உறவின் மேன்மையை உணர்த்தும்
உன்னத வருடல்...
மீண்டும் நிமிர்கிறேன்
ஓ... விழி நீர் துடைக்க விளையும் விசித்திரக் கரங்கள்...
பசித்திருந்தவனுக்கு பால் சோறு போல...
ஆதவனின் சில கதிர்கள் இப்போது
அவசரமாய் என் மீது படர்கிறது...
அன்பு செய்ய ... அரவணைக்க...
என் கண்களுக்கு நீ இன்னுமொரு அன்னை திரேசாவாக....

4 comments:

  1. //தன் கால்களுக்கடியில் நான்
    தளர்ந்து கிடப்பது தெரியாமல்...
    மீண்டும் கவிழ்ந்து போகிறேன்//

    arumai

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  3. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    நல்ல இருக்கு

    ReplyDelete
  4. நன்றி யாதவன்.. தொடர்ந்து உன் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!