தாழ்ந்து போகையில் வாழ்க்கையே வெறுத்திடும்
தாழ்விலும் மனிதா சிந்தனை செய்திடு _நீ
தாண்டி வந்திட்ட மகிழ்ச்சியின் கணங்களை
சின்னக் குழந்தையாய் தாயின் முலையிலே
சுரந்த பாலினைக் குடித்தது மகிழ்ச்சி
கன்னம் நனைந்திட பெற்றவள் நித்தமும்
தந்த முத்தங்கள் தித்திக்கும் மகிழ்ச்சி
பள்ளிப் பருவத்தில் பறந்து திரிந்ததும்
புள்ளி மான்களாய் பாய்ந்து திரிந்ததும்
பண்ணிய குறும்புகள் ஆயிரம் ஆயிரம்
எண்ணிப் பாரடா எத்தனை மகிழ்ச்சி
பருவ வயதிலே மங்கையாய் களையாய்
பாடித் திரிந்ததை ஆடி மகிழ்ந்ததை
நட்புக்கள் சூழ வாழ்ந்ததை எண்ணு
நிச்சயம் அதுவே மகிழ்ச்சி என்பாய்
கன்னியர் தமைக் கண்டதும் அவர்
கடைக்கண் பார்வை பட்டது மகிழ்ச்சி
சின்னதாய் புன்னகை சிந்தினால் போதும்
ஐயகோ ஐயகோ மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சி
வண்ணக் கனவுகள் கண்டு திழைத்ததும்
வாழ்க்கையில் இலட்சியம் கொண்டு நடந்ததும்
திண்ணிய முடிவுகள் நடத்தி முடித்ததும்
எண்ணிப்பார் மகிழ்ச்சியில் எப்படி மூழ்கினாய்
எத்தனை பசுமை நினைவுகள் நெஞ்சில்
இத்தனை போதும் உன்னை நீ மீட்க
எத்தனை இடர்கள் வந்த போதிலும்
புத்தம் புதிதாய் மீண்டும் நீ எழுவாய்
Tweet | |||
//சின்னதாய் புன்னகை சிந்தினால் போதும்
ReplyDeleteஐயகோ ஐயகோ மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சி//
ரசித்தேன்.
//களையாய்//
காளையாய்...
Nice one excellent
ReplyDeletevaazhthukkal.
ReplyDeletemullaiamuthan