Thursday 4 April 2013

அனங்கனை வாழ்த்துகிறேன்!






இதே நாள் தான், இனிதான நாள், 

இன்றல்லவா நான் 
தாயெனும் முழுமை அடைந்தேன்
மகனே, உன்னால் தானே!



மனதில் பசுமையாக தவழ்கின்றன 

மகனாய் நீ பிறந்த இந்நாளில் - உன்
முகம் காண தவம் இருந்த நாட்களும்
முகம் கண்டு ஆனந்தம் கொண்ட நாளும்...



ஆயிரம் ஆசைகளை மனதில் அடக்கி

அனங்கன் உன்னை ஆசையுடன்
அள்ளி அணைக்க முடியாத தூரத்திலிருந்து
அழுதுகொண்டே வாழ்த்துகிறேன்!



அன்பு சிறந்து நீங்கள் அகிலம் போற்ற வாழ

அனங்கன் உன் நினைவில் 
ஆயிரம் முத்தங்களுடன்
இதயத்திலிருந்து வாழ்த்தும் உன் அம்மா!



5 comments:

  1. தொலைவிலிருந்து அழுகிற இதயத்துடன் அனங்கனுக்கு ஆயிரம் வாழ்த்துக்களை அள்ளித் தெளிக்கும் அவன் அம்மாவுடன் இணைந்து அதே உணர்வுகளுடன் நானும் வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  2. தாயும் செய்யும் சேரும் நாட்கள் விரைவில் வரும்

    அனங்கனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அன்புமகளே கோதை...
    அனங்கனுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    அனங்கன்செல்வம் நோய்நொடி இல்லாமல் நிறைந்த கல்வியும் பெறுதற்கரிய பேறுகள் யாவும் பெற்று நீடூழிகாலம் வாழ்க வாழ்கவென அன்போடு வாழ்த்துகிறேன்!

    உங்கள் கனவுகள் யாரும் விரைவில் நனவாக வேண்டுகிறேன் கோதை!
    இறை அருள் எல்லோரையும் காக்கட்டும்...

    ReplyDelete
  4. விரைவில் நல்லது நடக்க வேண்டுகிறேன்...

    ReplyDelete
  5. மனதில் வலிகள் மறைந்து
    மகிழும் நன் நாள் கூடி வர
    உங்கள் உயில் கலந்தவன் வாழ்வை
    உலகம் போற்ற வாழ்த்துகின்றேன் !..
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனங்கன் .......

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!