Tuesday, 28 September 2010

தன்னலம்

அன்பைப் பெறுபவர்க்கு கொஞ்சம்
அரவணைக்க நெஞ்சமில்லை
அதிகம் உழைப்பவர்க்கு கொஞ்சம்
அமர்ந்திருக்கும் ஆசையில்லை
உச்சியில் நிற்பவர்க்கு கொஞ்சம்
ஏற்றிவிடும் சிந்தையில்லை
உறவாய் வந்தவர்க்கு கொஞ்சம்
உதவி செய்ய உள்ளமில்லை
தன்னை மட்டும் சிந்திக்கும்
தன்னலம் கொண்ட மனிதர்
மற்றவரை எண்ணி விட
மனமற்ற மாந்தர்

4 comments:

  1. என்ன கன நாளைக்கு பின்பு
    நல்ல கவிதை

    ReplyDelete
  2. நன்றி யாதவன் ... கன நாளைக்குப் பிறகு எழுதிய கவிதையை வெளிக் கொன்டு வர முடிந்தது.. இன்னும் கவிதைகள் இருக்கு.. ஆனால் வெளியிட வசதி கிடைக்கவில்லை

    ReplyDelete
  3. நல்லா இருக்கு அக்கா

    ReplyDelete
  4. உங்கள் கருத்துக்கு நன்றி சிவா

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!