Saturday, 4 December 2010

வெண்பனியே வெண்பனியே....

வெண்பனியே வெண்பனியே
வேதனை சொல்வேன் கேளாய்
பெண்ணின் நெஞ்சம் உன் குளிரில்
பகரும் துன்பம் கேளாய்

பனிக்கும் விழிகள் துடிக்கும் உதடு

பறையும் சேதி உனக்கு மட்டுமே
விறைத்துப் போன உந்தனுக்கு
விசனம் புரிய இயலுமோ

வாழ்க்கைப் பாதை துன்பம்
வாழும் விதங்கள் துன்பம்
வாழும் காலம் துன்பம் என
வாய்விட்டழுவது அறிவாயோ

உண்மை உறவெனக்கொண்டவர்
உண்மை முகத்தைக் கண்டு
கண்கள் சிவக்க நெஞ்சம் சிதற
கலங்கிப் போனதறிவாயோ

தனிமை நெஞ்சை  வாட்டுது
தாகம் அன்பைத் தேடுது
மழலைகள் முகத்தைத் தேடியே
மயங்குது சிந்தை கலங்குது

இறைவன் ஒருவனே வல்லவன்
இயங்கும் யாவும் அவனாலே
இன்னல்கள் யாவும் அவன் பாதம்
ஈந்தேன் அறிவாய் வெண்பனியே

4 comments:

  1. ungal karuththukku nanry

    ReplyDelete
  2. ஃஃஃஃஉண்மை உறவெனக்கொண்டவர்
    உண்மை முகத்தைக் கண்டு
    கண்கள் சிவக்க நெஞ்சம் சிதற
    கலங்கிப் போனதறிவாயோஃஃஃஃ

    உணர்வுபூர்வமான வரிகள் அக்கா.. வாழ்த்துக்கள்..

    இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

    ReplyDelete
  3. நன்றி சுதா... உங்கள் வரவுக்கு மிக்க நன்றி... இப்பொழுது தான் நீங்கள் வந்து சென்ற தடம் கண்டேன். அடிக்கடி வந்து செல்லுங்கள். அத்துடன் மறக்காமல் உங்கள் தடத்தை விட்டுச் செல்லுங்கள். அதுவே என் போன்ற வளரும் எழுத்தாள‌ர்களை ஊக்குவிக்கும். உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!