Monday, 17 January 2011

பொங்கும் உணர்வு

தை திருநாள் வருமென்று காத்திருந்த போது‍_நெஞ்சை
தைக்கின்ற சேதி... நம் மண்ணில் அங்கே
பொங்கிப் பெருகுதையா மழை வெள்ளம்
பொசுங்கிப் போனதையா என் உள்ளம்

Christian aid agencies respond to global flood crises
இன்னும் ஏனோ துன்பமையா..
இனியும் நீழுமோ தொடர் கதையாய்
இறைவன் என்னினம் மீது
இரக்கம் பேண மறந்தானோ

ஆழிப்பேரலை அவலங்கள்
அதன் பின் வன்னித் துயரங்கள்
அடுத்து வெள்ளம் தொடர்கதையோ
அடுக்காய் துன்பம் நம்மவர்க்கோ

விடுப்பேன் இயற்கையே சவால் உனக்கு
விழுந்த போதெல்லாம் அழுதோம் தான்_ஆனால்
எழாமல் போனதில்லை.. உறைந்து போனதில்லை
எழுவோம் இனியும் புதுப் பொலிவாய்

பொங்கி எழுவது எம் உணர்வே
மங்கிப் போயிடும் பய உணர்வு
எங்கள் இனத்தை எது வந்து தாக்கிடினும்_மறு
திங்களில் எழுவோம் மறுபடி ஜொலிப்போம்

2 comments:

  1. அக்கா நாம் தமிழர் தமிழர் என்றால் அழிவு என்று எழுதப்படுவிட்டது அழிவி இருந்து எழும்பும் நெருப்பு தான் தமிழனின் குணம்
    காலம்வர எல்லாம் கை கூடும்

    ReplyDelete
  2. உண்மை தான் யாதவன்... அந்த நம்பிக்கை தான் இன்னும் நம்மை நிமிர வைக்கிறது

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!