காரமான விடயங்கள்... காத்திரமான கருத்துக்கள்
அன்புடன் தம்பி..... இப்படித் தொடங்கியது தான் அந்த உறவு
எத்தனை பெரிய விடயத்தையும் இத்தனை
இலகுவாய் இனிக்கத் தருகிறானே...
சிற்பத்தை இரசித்த எனக்கு அந்த சிற்பியைக் காண ஆசை
எப்படியிருப்பான்... எழுத்தின் படியே கொஞ்சம்
எடுப்பாக.. கடுப்பாக... எப்படியோ.. அவனைக் காணவேண்டும்
அந்த எழுத்துக்காக... அதன் வலிமைக்காக....
மீண்டும் எழுதினேன்... அன்புடன் தம்பி...
ஊருக்கு வருகிறேன்... உன்னைக் காணலாமா....
பதிலில்லை... பரிதவித்துப் போனேன்...
பதிலைக் காணோமே... பயந்தாங்கொள்ளியோ...
பலவாறு எண்ணம் ஓட கொஞ்சம் கவலை...
எதிர்பாராத ஒரு நாளில் என் தொலைபேசியில் அவன்...
எங்கே நிற்கிறீர்கள்... இதோ வந்து கொண்டிருக்கிறேன்..
அடுத்த சில மணிகளிலே... வீட்டு வாசலிலே...மோட்டார் சைக்கிளிலே...
அடேயப்பா... இந்தக் கடுகா... அத்தனை காரம்.....
கடுகு உருவத்தில் மட்டும் தான்....
இந்தக் குழந்தைச் சிhpப்பு அதன் எழுத்துகளில்
இம்மியளவுகூட இல்லையே...
ஆனால் அந்தக் காத்திரமான கருத்துக்கள்
அவன் பேச்சிலும் கூட....
யாழ்மண்ணில் ஒளிர்கின்ற பிரமாண்ட மின்குமிழ்...
நிச்சயமாய் அவன் எதிர்காலம் நின்று ஜொலிக்கும்...
சமூகத்தை நேசிக்கும் அவன் சரித்திரத்தில் நிமிர்வான்...
தனக்குத் தொpந்ததை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும்
தாராள மனம் படைத்தவன்.....
அட.... யாரது என்று யோசிக்கிறீர்களா...
வேற யாரு... நம்ம சுதா... மதிசுதா தானுங்கோ....
அவன் பெயருக்கு முன்னால் அந்த மதி...
அவனுக்குப் பொருத்தமானதே...
வாழ்க நீ.... வளர்க உன் திறன்...
நீள்க உன் சேவை.... நிறைவோடு வாழ்க...
(யாராவது பொறாமைப்படாதீங்க.... எனக்கு காய்ச்சல் வந்திடும்!!!)
Tweet | |||
மதிசுதாவினை, ஆவலோடு காத்திருந்து சந்தித்ததினை அருமையான கவிதையாக எழுதியிருக்கிறீங்க.
ReplyDeleteரசித்தேன்.
நம்ம தம்பியை பயந்தான் கொள்ளி என்று நினைத்ததை வன்மையாய் கண்டிக்கின்றேன்
ReplyDeleteஅக்கா, அந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள்....
ReplyDeleteஒற்றைப் புன்னகையில்
என் ஆழ் மனதை
பல பாசக் கீற்றுகள்
ஊடுருவியதை உணர்ந்த கணமிது.
தங்களை வழியனுப்ப
வழியில்லமல் போனது
என் விழியில் எப்போதும் ஏக்கமே.
இந்த மணி முட்கள்
மீண்டும் சந்திக்கும்
கடிகாரத்தின் வெளியே.
உண்மைதான் நிருபன்... சுதாவை சந்தித்தது பெரிய விடயம்...ஆனால் எதிர்பாராத சந்திப்பாகப் போய் விட்டது.அதனால் வந்தார் போனார் என்றாகிவிட்டது. நன்றாக உபசரிக்க முடியவில்லை.
ReplyDeleteயாது... நம்ம தம்பிய பயந்தாங்கொள்ளி எண்டு நினைச்சேண்டா.. ஆனா அவ வீரன் எண்டு நிரூபிச்சிட்டாண்டா...(என்னைச் சந்திக்க எதுக்குடா வீரம்???)
சுதா... உங்கள் பாசத்துக்கு நன்றி... நிச்சயம் மீண்டும் ஒரு முறை சந்திப்போம்.... ஆமா.. முதல்ல உங்கட ஈமெயிலில என்னோட அட்ரச வெயிடிங் லிஸ்டில இருந்து எடுத்து உங்க பாசத்த காட்டுங்க...வந்ததும் ஒரு மெயில் போட்டேன் பதிலைக் காணோம்...
என்னது? சுதா சாதா என நினைச்சீங்களா? வீரராக்கும்? ஹா ஹா
ReplyDeleteஉங்கள் அன்பு கவிதையூடாகவும் மதியின் பின்னூட்டமூடாகவும் வெளிப்படுகிறது...
ReplyDeleteகவிதை நல்லாயிருக்குங்க..
வாழ்த்துக்கள்..
நானும் இந்த மனிதரை ஒருநாள்..சந்திப்பேன்....
ReplyDeleteகவிதை அழகு..அதைவிட நாஜகன் அழகு.....