Wednesday, 18 April 2012

காத்திருப்பு

கர்ப்பதிலிருந்து தாயின்

கரங்களிலே தவழ்வதற்காய் காத்திருப்பு

பள்ளிப் பருவத்திலே 

பரீட்சை முடிவுகளுக்காய் காத்திருப்பு

கன்னிப் பருவத்திலே

காதல் கணவனுக்காய் காத்திருப்பு

கைப்பிடித்த பின்னர் ஒரு

குழந்தைக்காய் காத்திருப்பு

வன்னி மண்ணிலே உயிர்

வாழ்வதற்காய் காத்திருப்பு

மீண்ட பின்னர் வாழ்வில்

மீண்டும் எழுவதற்காய் காத்திருப்பு

வெளிநாடு செல்வதற்காய் காத்திருப்பு

விசாவுக்காய் காத்திருப்பு- நல்ல

வேலைக்காய் காத்திருப்பு... இவற்றிற்காய்

இறைபதத்தில் காத்திருப்பு

எப்போது முடியும் இந்த

இடைவிடாத காத்திருப்பு...?



இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

4 comments:

  1. @முல்லை அமுதன்
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  2. That’s true its life, derived over experience, keep up the good writing, Wish You All the Best, PAMS

    ReplyDelete
  3. காத்திருப்பு வரிக்கு வரி அருமையான கோர்வை. ஏக்கம், தவிப்பு , கோபம், நேசம் எல்லாம் பேசுகிறது ஒரு கவிதை.

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!