Thursday 31 January 2013

கானல் நீர் உறவுகள்...

கருக்கொண்ட கனவுகளை

கருவிலேயே சிதைத்துவிட்டு
அருவமாய் ஓரு கரியமூலைக்குள்
சுருண்டு போகிறேன்.... என்
கசந்த பார்வையில்
குவியம் தொலைந்து போன
காட்சிகளாய் உலக உறவுகள்
கையேந்தி நிற்கா கடினமனம்...
பிடிவாதம் உடுத்திக்கொண்ட
பிச்சைக்காரியாய்...பாசத்தைத் தேடி
நாவரண்டு தவித்த போது
தாகம் தீர்க்கும் பேராறு போல்
நீண்ட கரங்களையெல்லாம்...
தேடித்தேடி தோற்கிறேன்
தொண்டை வற்றிய பின்
தோன்றும் கானல் நீராய் அவை..




இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

1 comment:

  1. ஏக்கத்தின் சாரலை மனம் இளகும் வகையில் கவிதை
    வரிகளாகத் தொடுத்த விதம் அருமை ! உங்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி தொடர்ந்தும் முயற்சியுங்கள் முன்னுக்கு வருவீர்கள் .

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!