Saturday, 9 March 2013

பெண்ணே குரல் கொடு...

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டுக்களைப் பதிவிட இங்கே கிளிக்குங்க

International Women's Day -2013

பாதுகாப்பும் சுதந்திரமும் இருக்குதென்றே
பேசாது மௌனியாய் இருக்கும்
பெண்ணே...
பாமரப் பெண்ணுக்கு அவள்
படுக்கையும் அடுக்களையும் சொல்லும்
அடக்குமுறை என்னவென்று....
படித்த பெண்ணுக்கு அவள்
பணியிடம் சொல்லும் அடக்குமுறை...

ஆகாரம் ஆக்கவும் உண்ணவுமன்றி
ஆகாது அவள் வாய் திறத்தல்..
மாமியார் என்றொரு அதிகாரம் கொண்டு
மருமகளை ஆட்டுவிக்கும் அடக்குமுறை
உயரதிகாரி முதல் அத்தனை பேரிடமும்
உதைபட்டுப் பந்தாகும் இழி வாழ்க்கை...
பெண்களே போர்க் கைதிகள் என்றால்
புணர்வதே தண்டனை என வழங்கும்
புல்லர்கள் வாழும் பொல்லாத உலகு..
திராவகம் வீசும் இழிசெயலும்
திரைமறைவில் தாக்குவதும்
தீச்செயல்கள் செய்வதுவும் உன்
தங்கைகளுகெதிராய் என்றுணர்வாய்

பெண்ணே..
காயம் உனக்கில்லை என்றாலும்
காமம் கொண்டலையும் நீசர்மேல்
காறி உமிழ்ந்து விடு
காப்பாற்று உன் சோதரியை..
கடமை உனக்கு அது..
பூவைக்குள் மென்மை மட்டுமல்ல
பூகம்பமும் பூக்கும் எனக்காட்டு
நெஞ்சில் நெருப்பேந்து
கொஞ்சம் விழியில் சினமேந்து
மஞ்சம் உந்தன் தனி வாழ்வை
மட்டுறுத்தும் நிலை மாற்று-விழி
ஈரம் தனைத் துடைத்து – உள
வீரம் தனைப் போர்த்து
பெண்ணாய் பூவுலகில் பிறந்தது உன்
பெருமை என்றே எண்ணம் கொள் -பிற
பெண்களுக்காகக் குரல் உயர்த்து
பெருமை பெறும் உன் பிறப்பு

சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள்!!!

10 comments:

 1. அருமையான வரைவுச் சித்திரம் சகோதரி...
  கவிதையின் பொருளை உணர்த்திவிட்டது....
  ஆணாதிக்கமும், பெண்ணடிமையும்
  முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று சொல்ல இயலாது
  ஆயினும் குறைந்து வருகிறது...
  காலப்போக்கில் இனமென்று ஒன்றே
  அதுவே மனித இனமென கூவிச் சொல்லும்
  நாள் வரும்...
  வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. மொரு கவிதையூடாகவே கருத்ஹ்டு சொல்லியிருக்கிறிங்க.. மிக்க நன்றி அண்ணா!

   Delete
  2. மன்னிக்க வேண்டும்.. எழுத்துப் பிழையாக வந்துவிட்டது..
   ஒரு கவிதையூடாக கருத்து சொல்லியிருக்கிறீங்க... என்று சொல்ல வந்தேன்... :)

   Delete
 2. கார்ட்டூனிஸ்ட் பூங்கோதைக்கு வாழ்த்துக்கள்.. கவிதையும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. என்னது... காட்டூனிஸ்ட்டா.. ஏன் அண்ணா இப்படி கேலி செய்யுறீங்க.. சும்மா ஏதோ என் கவிதைக்குப் பொருந்துமே என்று முயற்சி பண்ணி வரையுறேன்..
   வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி அண்ணா..

   Delete
 3. பெண்ணே..
  காயம் உனக்கில்லை என்றாலும்
  காமம் கொண்டலையும் நீசர்மேல்
  காறி உமிழ்ந்து விடு
  காப்பாற்று உன் சோதரியை..
  கடமை உனக்கு அது..
  பூவைக்குள் மென்மை மட்டுமல்ல
  பூகம்பமும் பூக்கும் எனக்காட்டு
  நெஞ்சில் நெருப்பேந்து
  கொஞ்சம் விழியில் சினமேந்து

  கவலையை விடுங்கள் இப்போது
  அந்தக் காலம் மெல்ல மெல்ல
  மலர ஆரம்பித்துள்ளது அது மேலும்
  சிறப்பாய்த் தொடரும் சகோதரி !

  ReplyDelete
 4. நல்ல கவிதை...

  மகளிர் தின வாழ்த்துக்கள்...

  இன்று மட்டும் அல்ல...

  ...

  ...


  என்றும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. பெண்களின் அடக்குமுறையைச் சொல்லிச்செல்லும் அருமைக் கவிதை !அழகான் காட்சிப்படம் !

  ReplyDelete
 6. மகளிர்தின வாழ்த்துக்கள்.

  கவிதை நன்றாக இருக்கு குறை சொல்ல இடமில்லை.

  ஆனா ஏன் இன்னும் பெண்களை குறைவாகவே எண்ணவேண்டும்... நாம் நிறையவே முன்னேறித்தானே இருக்கிறோம்... சுகந்திரமாகத்தானே இருக்கிறோம்ம்... அந்தப் பக்கத்தையும் நினைத்து கவிதையில் கலந்திருக்கலாமோ என எண்ணத் தோணுது....

  முந்தி அடிமையாக நடத்திய காலம்போய், இப்போ கணவன்மாரே சமைச்சு, ரீ ஊத்திக் கொடுக்குமளவுக்கு முன்னேறியிருப்பதைப் பார்த்து பெருமை கொள்ளலாமெல்லோ.. அதுக்காக எல்லா நாட்டிலும் எல்லா இடத்திலும் பெண்கள் சுகந்திரமாக இருக்கினம் என சொல்லவில்லை, ஆனா அடிமைத்தனமென்பது கால்வாசிக்குப் போய் சுகந்திரம் முக்கால்வாசியாக உயர்திருக்கிறதென்றுதான் என் கணிப்பின்படி சொல்வேன்.

  ReplyDelete
 7. இப்போல்லாம் பெண்கள் நல்லா உஷாராகிட்டாங்க...

  நல்ல கவிதை, வாழ்த்துக்கள்...

  ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!