Monday 15 April 2013

ஏழாண்டு நிறைவில் என்தந்தை நினைவில்....

(என் மூத்த சகோதரி நெலோமி அன்ரனிக்குரூஸ் என் தந்தையின் நினைவாக எழுதிய பாடல்.. )

பாட்டெழுதி நின்ற குயில்


பறந்து போய் ஏழாண்டு

கூட்டுக் குருவிகள் தேடியும் கிடைக்கல

குடும்பவிளக்காய் நின்ற தலைவனை..

எட்டில் சரித்திரம் ஆகிய தந்தையை

சரித்திரத்தில் மாமனிதனாய்

சிரிக்கும் வல்லவன்...

பலகலையும் தனக்குள் கொண்டும்..

பெருமை கொள்ளா நன் மனத்தான்

பலம் கொண்ட நாவினன்

பயம் அறியா நெஞ்சினன்

பெற்றவன் என்று சொல்ல நெஞ்சு

பெருமையில் மிதக்குது..

தந்தையே உங்கள் கனவுகளை

சிந்தையில் கொண்டோம் உம மக்கள்..

நிச்சயம் உங்கள் ஆசைப்படி..

நின்று உழைப்பேன் தமிழுக்காய்..

ஆண்டுகள் பல ஓடினாலும்

அகலாது உங்கள் நினைவு என்றும்..

9 comments:

  1. இந்த நாளின் ஒவ்வொரு வினாடியும் மறக்க முடியாததாய் இருக்கும்.......
    இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறந்து போவது மட்டுமே நிஜம்..
    நாம் எல்லோரும் மரணத்தைச் சுமந்தவர்களே

    ReplyDelete
  2. கோதை... உங்கள் தந்தையார் கவிஞர் நாவண்ணனின் ஏழாம் ஆண்டு நினைவுப் பகிர்தலில் நானும் கலந்துகொள்கின்றேன்...
    கவிஞர் ஐயாவின் ஆன்ம சாந்திக்காக நானும் வேண்டுகிறேன்...

    இன்றுதான் அந்தப்பெரிய கவிஞரின் மகள்தான் நீங்கள் என்பது எனக்குத்தெரிகிறது. உமது திறமையே அதைப் பறைசாற்றுகிறது.

    அவரின் பணியை நீங்கள் தொடர்ந்து செய்வதே அவரின் ஆன்ம சாந்திக்கு நீங்கள் செய்யும் பெரிய செயலாகும்.

    வாழ்க தமிழ்! நிலைக்கட்டும் அவர் புகழ்!!

    ReplyDelete
  3. உங்கள் உள்ளத்தில் இன்னும் வாழ்கிறார்...

    ReplyDelete
  4. தந்தையின் நினைவு இன்னும் உங்களிடமும் உங்கள் எழுத்திலும் என்றும் வாழும் என்பதுமட்டும் நிச்சயம்!

    ReplyDelete
  5. மகத்தான ஒரு மனிதரை தந்தையாகப் பெற்றிருக்கிறீர்கள் கோதை! இந்தக் கவிதை படித்ததும் அவரை இழந்த கனம் என் மனதிலும் அழுத்துகிறது. நினைவுகளில் என்றும் வாழும் அவரை வணங்குகிறேன்! இளமதி சிஸ்டர் சொன்னது போல அவரின் வாரிசாகிய உங்களின் எழுத்துக்கள் தொடர்ந்து என்றும் சிறந்து விளங்கட்டும்!

    ReplyDelete
  6. கடந்த கால எந்த நிகழ்வையும் மறக்கமுடியாது, அப்படி இருக்கும்போது தந்தை மறைந்தாலும் அவரின் நினைவுகள் என்றும் பசுமையானதாகவே இருக்கும். உங்கள் சகோதரி இயற்றிய பாடலும் நன்றாக இருக்கு.

    ReplyDelete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  8. தந்தையின் நினைவைப்போற்றும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கல்..

    இனிய அன்னையர் தின வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. இழப்பின் துயர் கொடியது
    இருந்தபோதும்
    நம்மோடு இருந்தவர்கள்
    இளப்பாறிய பொழுதினை நினைப்பது
    மகத்தானது.

    நினைவுகள் என்றும்
    நம்மைவிட்டு மறைவதில்லை
    நாம் மறையும்வரை..

    பாடலும் வரிகளும் அருமை

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!