சுந்தர பூமியென்று
சுற்றிப் பார்க்கையிலே அதன்
அந்தரங்கம் கண்டு
அந்தரித்துப் போனேன்
விந்தையான மனிதர்கள்
சிந்தையெங்கும் சின்னத்தனம்
நிந்தித்து மற்றவரை
நித்தமும் மகிழ்பவர்கள்
முதுகெலும்பு உள்ளதனை
முற்றிலும் மறந்தவர்கள்
பசுத்தோலைப் போர்த்திக் கொண்ட
பயங்கரமான நரிகள்
Add caption |
அந்தரிக்கும் வேளையிலும்
அடைக்கலம் கொடுக்க
அகம் இல்லா உறவுகள்....
இன்னும் எத்தனையோ....
மூச்சு இரைக்குக்குதடா இவர்
மதியின்மை எண்ணுகையில்....
இதை சுவர்க்க பூமியென எண்ணி
இன்னமும் எம் மண்ணில் காத்திருக்கும்
சகோதரனே சகோதரியே ...
அங்கு இருக்கும் வரையில் தான்
இங்கிருக்கும் உந்தன்
அண்ணனுக்கும் மாமனுக்கும் சித்தப்பனுக்கும்
அன்பான உறவு நீ...
அதையே பெரிதாக நம்பி
இங்கு வந்து விட்டால்....
நடுத்தெருவில் நின்றாலும் உன்னை
ஏனென்று கேட்க யாரும் வரார்
ஏனென்றால்... அவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல
அவர்களும் கூட இங்கே
இயந்திரங்கள் தான்...
Tweet | |||
என்ன அனுபவம் பேசுது
ReplyDeleteஉண்மை தான் யாதவன்.... அனுபவங்கள் நமது ஆசான்கள்
ReplyDeleteஅம்மாடி என்னவொரு தடித்த வார்த்தைகள்.. ஆனாலும் நிகழ்வுகளின் வீரியம் குறையாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதால் பாராட்டுக்கள் சகோ...
ReplyDeleteகவிதையின் நடை மிக அருமை..
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி பாரதி சார்.. எப்பொழுதுமே உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவது என் இயல்பு. அதுவே என் பலமும் பலவீனமும்..
ReplyDeleteஉணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவது என் இயல்பு. அதுவே என் பலமும் பலவீனமும்..
ReplyDeleteபலமும் பலவீனமும் தெரிந்து கொண்டால் அவன் பூரண மனிதன் ஆகிவிடுவான்
தங்களின் கவி நடை சூப்பர்
நன்றி ஃபர்ஹான். தொடர்ந்தும் என் தளத்திற்கு வரவேற்பதுடன் பின்னூட்டல்களை எதிர்பார்க்கிறேன்.
ReplyDelete