Monday 2 May 2011

குருதி தோய்ந்த நிலவு

தோழி... 
நினைவுச் சுழலுக்குள் அவ்வப்போது
நுழைந்து கொள்கிறாய்....
நிர்மூலமாக்கப்பட்ட என் கனவுகளில்
நிலவாக இடையிடையே....
கன்னக் குழி விழக் கதைகள் சொன்னதும்- உன்
மென்னகைக்குள் என் இரசனைச் சிறகுகள்
மெல்லப் புதைந்ததும்....
சின்னாபின்னமாய்ப் போன நினைவுகள்....
சின்ன இதயத்தை சிறுகச் சிறுகக் கொல்லும்
கிராதகர்கள்... எப்படி முடிந்தது உன்
சிவந்த மேனியைக் குதறித் தள்ள...
சட்டித் தொப்பிக்குள் சாக்கடையின் உறைவிடம்
தட்டிக் கேட்க நாதியின்றி நாணிக் குறுகி
தலை குனிகிறேன்... தணலாக
தகிக்கிறது குருதி தோய்ந்த நிலவு...



4 comments:

  1. வேதனையின் வடுக்கள்
    கொடுமையின் ஆட்சி
    சின்னபின்னமான உயிர்கள்
    சிவந்து நிக்கும் கண்கள்
    ஆனால் கேவலம்
    எம்மால் முடியவில்லை

    ReplyDelete
  2. பிளாக்ல செக் பணூங்க.. ஏதோ ஜப்பானிஷ் மொழி மாதிரி தெரியுது

    ReplyDelete
  3. இப்ப ஓக்கே.. கவிதை நீட் மேடம்

    ReplyDelete
  4. நன்றி.. யாதவன், நன்றி செந்தில் சார்...அக்கறையோடு தமிழ் எழுத்துப் பிழையையும் திருத்தி அனுப்பியதற்கும் நன்றி...அத்துடன் கவிதையையும் விமர்சியுங்கள்... அதுவும் என் வளர்ச்சிக்கு அவசியம்

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!