Monday 13 June 2011

ஊருக்குப் போறேன்...

ஊருக்குப் போறேன்...
ஊருக்குப் போறேன்..
விட்டு வந்த உயிரோடு மீண்டும்
ஒட்டி உறவாட
தொட்டிலிலே விட்டவளைக்
கட்டி அணைத்தாட
பார்த்து விழி பு+த்திருக்கும் பிஞ்சுகளில்
பாசம் பொழிவதற்கு... இன்னும்...
எத்தனையோ... எத்தனையோ....
எண்ணிலடங்கா ஏக்கங்கள்..
எப்படி இருக்கும் எங்களூர்...
இருபுறமும் அலைந்தாடும் உப்பு நீரிடையே
இப்போது திறந்த புதிய பாலம்...
நாகரீகம் புகுந்தும் புகாமலுமான
நடுத்தரப் பட்டினம்....
சிறிய ஓலைக் குடிசை..
சூழவுள்ள உறவுகள்....
கிணற்றடியில் நின்ற நிழல் மரவள்ளி....
வீட்டைச் சுற்றி நிற்கும் மாதுளை..
பரந்து விரிந்த மணற்றரை....
நான் உட்கார்ந்து மகிழும் திண்ணை....
நீண்ட தொடுகடல்....
ஆனாலும்... இன்னமும் அந்த..
சுடு குழல்களின் முன்னால்
சுதந்திரத்துக்காக கரமேந்தியபடி...

11 comments:

  1. >>பார்த்து விழி பு+த்திருக்கும் பிஞ்சுகளில்

    பார்த்து விழி பூத்திருக்கும் பிஞ்சுகளில்

    ReplyDelete
  2. உங்களின் ஊருக்கான பயணமும் பாசமும் முழுமையாய் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //தொட்டிலிலே விட்டவளைக்
    கட்டி அணைத்தாட//

    அழகான சிறுகதையில் சடன் ட்விஸ்ட் தூள் பண்றிங்க.

    ReplyDelete
  4. வரிகளில் ஏக்கம் புரிகிறது.....

    பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. உறவுகளை விட்டுப் பிரிந்தவர்களின்
    இன்றைய மனநிலையை அழகிய
    கவிதைவரிகளால் மிக அழகாக
    சித்தரித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்
    சகோதரி உங்கள் முயற்சி மென்மேலும் சிறப்புற!.......

    ReplyDelete
  6. ஆனாலும்... இன்னமும் அந்த..
    சுடு குழல்களின் முன்னால்
    சுதந்திரத்துக்காக கரமேந்தியபடி...


    supper............
    i like this poem..
    "congratulation"

    can you come my said?

    ReplyDelete
  7. அருமையான கவிதை. வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  8. நன்றி சி.பி, யாது,முருகேசன்,சந்ரு, அம்பாளடியாள்,விடிவெள்ளி, ஜாவிட்....
    உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

    தொடர்ந்து வருகை தாருங்கள்... பின்னூட்டம் தாருங்கள்

    ReplyDelete
  9. குழந்தை தனம் மாறாத சந்தோசம் ,மற்றும் வேதனையை வெளிப்படுத்தும் கவிதை அருமை.

    ReplyDelete
  10. sirantha pagirvu.vaalthukkal sagothari

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!