Tuesday, 19 February 2013

நான் செய்தது தவறு தானுங்க...


என்னடா இதுன்னு தலைப்பைப் பார்த்து பயந்துட்டீங்களா?

ஒண்ணுமில்லீங்க.. தவறு செய்து, அதை யாராவது சுட்டிக் காட்டும்போது அதை ஏற்றுக் கொள்கிறவன் தானுங்க மனிதன்... நானும் அதே மனித இனத்தை சேர்ந்தவ தானே... அதான்... என் நண்பர் ஒருவர் மனம் நோகும்படி பிரயோகித்த ஒரு வார்த்தைக்காக மன்னிப்பு கேட்கலாம்னு வந்தேன்....
அட.. இப்புடியே பேசிட்டு இருக்காம விசயத்துக்கு வாயேண்டி... அப்படீன்னு நீங்க திட்டுறது கேட்குது... சொல்றேன்..

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

குறள் எண்: 12
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
மு. வரதராசனார்


இப்படி ஒரு அருமையான வார்த்தையை நாங்கள் அறிந்திருந்தும் அதை கடைப்பிடிப்பது அரிதாக தான் இருக்கு.. அந்த தவறைச் செய்பவர்களில் நானும் ஒருத்தியாயிட்டேன்.
சில நாட்களுக்கு முன்னால்.. `கலைஞர்கள், எழுத்தாளர்கள் கொஞ்சம் வளர்ந்ததும், ரசிகர்களை அல்லது வாசகர்களை மதிப்பதில்லைஎன்ற கருத்து உலவிய போது அதை நான் ஆதரித்தேன்.. என் நண்பர் மன்னார் அமுதன் அதை மறுத்தார். இதனால் இது பற்றி சிறிது விவாதித்தோம்...

என்னைப் பொறுத்தவரையில் என்னால் ஏற்கமுடியாத கருத்தாக இருந்தால் உற்ற நண்பர் என்ன ,கடவுளாக இருந்தாலும் சண்டை போடுவேன்... (உங்க ரவுடித் தனம் தான் ஊரே தெரிஞ்சு வைச்சிருக்கே.. இதுல நீங்க வேற சொல்லணுமா.. அப்படீங்கறீங்க.. சரி விட்ரலாம்...)

இந்த விவாதத்திற்கிடையில்.. என்னுடைய இன்னொரு நண்பர் இது பற்றி ஒரு பதிவு போட்டாரா.. நானும் சூட்டோடு சூடா அங்கே போய் கொமெண்ட் போடுறேன்னு நெனைச்சு... வாயில வந்ததெல்லாம் சொல்லிட்டேன்... சொன்னது என் கருத்தைத் தாங்க... அது ஒண்ணும் தப்பு கிடையாது.. ஆனால் நான் சொல்றது என்னோட நண்பனுக்கெதிரான கருத்து என்று கொஞ்சம் கூட யோசிக்காமவெங்காயங்கள்என்று சொல்லிட்டேன்... தப்பு ...தப்பு தாங்க... என் வாயிலயே போட்டுக்கிறேன்... அவர் அதைப் படித்துவிட்டு மனவருத்தத்தோடு சுட்டிக்காட்டினதுக்கப்புறம் தாங்க இந்த வெங்காயத்துக்கு (அது நானுங்க..) உறைச்சுது...

உண்மையிலேயே.. இதுவரைக்கும் நான் யாரையும் (எனக்கு தெரியாதவங்களைக் கூட) தனிப்பட்ட விதத்தில் பாதிக்குமளவுக்கு இப்படியான வார்த்தைகளைப் பாவித்ததில்ல... எப்படியோ முதன் முறையா தவறிச் செய்தது தான்.. ஆனாலும் அது என் தவறு என்கிறதை ஒப்புக் கொள்ளுறேங்க... இனிமேலும் இத்தகைய வார்த்தைகளைப் பிரயோகிக்கப் போவதில்லை.

அதனால என் நண்பரான மன்னார் அமுதனிடம் என்னுடைய தவறான வார்த்தைப் பிரயோகத்திற்காக பகிரங்கமாக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன்...
வாய் இருக்கு என்கிறதுக்காக எல்லாத்தையும் பேசக்கூடாது என்று நானே சிலருக்கு கூறியிருக்கிறேன்... அப்படியிருக்க நானே அந்த தவறைச் செய்திருப்பது மிகவும் மனவருத்தத்திற்குரியது தான்.இந்தப் பதிவு பதிவுலகத்தின் ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு செய்தியை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடும், நண்பர் மன்னார் அமுதனிடம் மன்னிப்பு கோரவுமே இங்கு பதிவிடுகிறேன்

பதிவர்கள் தனிப்பட்ட ஒருவரைச் சாடி பதிவிடுவது தவிர்க்க முடியாதது தான். ஏனென்றால் பல முரண்பாடுகள் ஒரு தனி மனிதனில் இருந்து தான் ஆரம்பிக்கின்றன. அதனால் அந்த ஒருவரைச் சாடுவதன் மூலம் அந்தக் கருத்தை மாற்ற முனையலாம். அதை விட பதிவர்கள் எப்போதும் சமூகத்துக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள்.. எனவே சமூகச் சீரழிவுகளை நோக்கியதாகவோ, அல்லது சமூகத்தை தவறாக வழிநடத்துவதாகவோ ஒருவர் அல்லது சிலர் நடந்து கொண்டால் அதை எதிர்க்க வேண்டியது பதிவர்களின் கடமை.. (முக்கிய குறிப்பு: இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருப்பது நான் பொதுவாக சொல்லும் கருத்து... இதில் ஒரு வீதமேனும் மன்னார் அமுதனைக் குறிக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்ளவும்..) அத்தோடு சமூகத்தை சீர் திருத்த வேண்டிய பதிவர்கள் தவறான கருத்துக்களை வெளியிடும் போது அதை முதன்முதலில் சுட்டிக்காட்ட வேண்டியவர்களும் பதிவர்களே......அதாவது நான் என்ன சொல்றேன்னா.. “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமேஎன்று யார் தவர் செய்தாலும் சுட்டிக் காட்ட வேண்டியவர்கள் நாம் என்பதே என் கருத்து. எனவே பதிவர்களிடம் தனிப்பட்டவர்களுக்கு எதிராக பதிவுகளை எழுதாதீர்கள் என்றெல்லாம் நான் சொல்லப்போவதில்லை.. ஆனால்.... பதிவுகளை வெளியிடும் போது அவர்களை தனிப்பட்ட விதத்தில் நோகும் வகையான காரமான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்க வேண்டுமென்ற என் கருத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோடு சேர்த்து... என் அன்புக்குரிய பதிவுலக நண்பர்களுக்கு இன்னுமொரு விடயம் சொல்ல விரும்புகிறேன்.. நீண்ட நாட்களாக என் மனதுக்குள் இது இருந்துட்டே வந்துது.. அதையும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே சொல்லிடுறேன்...
சில மாதங்களுக்கு முன் நான் ஒரு பதிவை எழுதிய போது, இரண்டு மூன்று நண்பர்கள் தங்கள் கருத்தை சொல்ல முன்வரவில்லை. ஏன் என்று காரணம் கேட்டால்எனக்கு உங்க கூட சண்டை போட விருப்பமில்லைஎன்கிறாங்க... இது என்னங்க நியாயம்??? நான் இப்போ தான் பதிவுலகத்தில் தவழ ஆரம்பித்திருக்கிறேன்.. என் கருத்துக்கள் தவறாக இருந்தால் நீங்கள் சுட்டிக் காட்டினால் தானே என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியும்... அது மட்டுமல்ல... இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் மோதிக்கொள்ளும் போது அதைப் பார்ப்பவர்களுக்கு ஒரு தெளிவான கருத்துப் பிறக்கும்.. அது ஒரு ஆரோக்கியமான முடிவாகவே இருக்கும்..

நண்பர்கள் என்பதற்காக ஒதுங்கிப் போவது இரண்டு வகையான தீமையைக் கொண்டு வரும்..
ஒன்று, நான் வெளியிடும் பதிவு தவறான கருத்தைக் கொண்டிருந்தால் அது அப்படியே சமூகத்துக்கு எடுத்துச்செல்லப்படும்அடுத்தது, என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சி கூட ஒரு குறுகிய வட்ட்த்துக்குள் அடங்கிவிடும்.. அதற்குமேல் ஒரு அடி கூட நகர முடியாமல் போகும்.. ஆனால் எதிர்விவாதங்கள் சிந்திக்க வைக்கும்நண்பர் மன்னார் அமுதன் என் தவறைச் சுட்டிக் காட்டாமல், மனவருத்ததோடு அமைதியாகியிருந்தால் இன்று என் தவறை நான் உணர்ந்திருக்க முடியாது. அதற்காக நண்பர் மன்னார் அமுதனுக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

ஆகவே... நீங்கள் ஒதுங்கிப் போவது உண்மையாகவே ஒரு நண்பன் அல்லது நண்பி என்ற காரணத்துக்காகத்தான் என்றால் அதை மாற்றி விடுங்கள்... உண்மை நண்பர்கள் அடுத்தவருடைய வளர்ச்சிக்கே உதவ வேண்டும்...
ஆகவே என் பதிவுலக நண்பர்களே.... நானும் எழுந்து நடக்க கொஞ்சம் உதவுங்களேன்.
அப்புறமென்ன... மன்னிப்பு கேட்டாச்சு... நன்றி சொல்லியாச்சு... நண்பர்களிடம் என் சின்ன ரிக்குவெஸ்ற்றும் கொடுத்தாச்சு......

ஃப்ரெண்ட்ஸ்... என்ன அப்படி பார்க்கிறீங்க..... எல்லாரும் சேர்ந்து என்னைக் கும்மப் போறீங்களா... ம்ம்.. இதான் சந்தர்ப்பம்... கும்ம விரும்புறவங்க எல்லாம் ஒவ்வொருத்தரா கும்மிட்டு போங்க.. எதுக்கும் எனக்கு வலிக்காம பார்த்துக்கோங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் (இதை வடிவேல் ஸ்டைல்ல சொல்லிப்பாருங்க... நிஜமாவே கும்மணும்னு தோணும்... )

விரைவில் மீண்டும் ஒரு பதிவுடன் சந்திக்கிறேன் நண்பர்களே....இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

10 comments:

 1. மன்னிப்பு கேட்பவன் மனிதன்.. மன்னிப்பவன் கடவுள் .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி விச்சு அண்ணா.. நலமா??
   ம்ம்.. அப்ப நான் மனித இனம் தான் எண்டதை ஏற்றுக் கொண்டிருக்கிறீங்க...நன்றி...நன்றி.. :))

   Delete
 2. ஆஹா புதுப் போஸ்ட் வந்திட்டுதோ?... என்ன ஒரே மன்னிப்பு மழை கொட்டுது.. என்னாச்சு பூங்கோதை?... தவறு செய்தால் அதை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதுதான் நல்ல குணம்.

  ஏன் தமிழ்மணம் வோட்டைக் காணேல்லை? இணைக்கவில்லையோ இன்னும்?..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ... வாங்கோ... அப்ப எனக்கு நல்ல குணம் தானே.. நீங்க ஏற்றுக் கொண்டால் சரி தான்.
   ///ஏன் தமிழ்மணம் வோட்டைக் காணேல்லை? இணைக்கவில்லையோ இன்னும்?/// அது என்னவோ இடையில நிக்குது... பார்ப்பம்.. மணியின்ர அடுத்த பதிவிலயாவது உதுக்கு வழி கிடைக்குமோ எண்டு..

   Delete
 3. ஹையோ இன்னொரு கொமெண்ட் போட்டேன் அதைக் காணவில்லை:(.. சரியாக போஸ்ட் பண்ணுப்படவில்லைப்போலும்.

  //இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!// நான் உரம் போட்டுவிட்டேன்ன்:) நீங்க மை க்கு எங்கின போவீங்க பதிவெழுத?:)..

  மன்னிப்பு கேட்ட உங்களை எப்படிக் கும்ம முடியும்? அதான் ஓல்ரெடி மன்னிப்பு கேட்டுவிட்டீங்களே:) ஹா..ஹா..ஹா.. அதனால இன்றுபோய் அடுத்தமுறை வருகிறேன்ன் கும்ம:).. இல்ல இல்ல சொறி:) பின்னூட்ட...:)

  ReplyDelete
  Replies
  1. அம்மணி இண்டைக்கு கும்மாமல் விட்டீங்கல்ல... நன்றீங்கோ...அடுத்த முறை ரெடியா இருக்கிறேன்.. கிறீஸ் எல்லாம் பூசிக்கொண்டு... வந்ததுக்கு நன்றி.. :) மியாவ்வ்வ்வ்வ்

   Delete
 4. நீங்கள் என்ன அப்படித் தப்பாகச் சொல்லிவிட்டீர்கள் என்று ஆவலோடு படிக்க வந்தேன்! ஜஸ்ட் வெங்காயம் என்றுதானே சொன்னீர்கள்! அட இதெல்லாம் ஒரு கூடாத வார்த்தையா என்ன? உங்கள் நண்பர் இதைக் கூடவா பொறுக்க மாட்டார்? அப்படியானவருடன் எல்லாம் ஏன் நட்பு வைச்சிருக்கீங்க?

  எனது நண்பன் நிரூபனை நான் பல நூறு முறை “எருமைத் தலையன்” என்று விளித்திருக்கிறேன்! அவனும் என்னை பண்டி என்றும், குளிக்காதவன் என்று எத்தனையோ முறை எழுதியிருக்கிறன்! ஹா ஹா ஆனால் நாம் ஒருநாளுமே கோபித்துக் கொண்டதில்லை!

  இதுதாங்க நட்பு! என்னைப் பொறுத்தவரை நீங்கள் அவரிடம் மன்னிப்புக் கேட்டிருக்கத் தேவையில்லை - அவர் உண்மையான நண்பர் என்றால்...............!!!

  ReplyDelete
  Replies
  1. நண்பர் பொறுத்து கொண்டார் மணி. எனக்குத் தான் உறுத்தலாக இருந்தது . அதனால் மன்னிப்பு கேட்டேன். உங்களுக்கும் நிருபனுக்கும் உள்ள நட்புக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது மணி.. பின்னூட்டத்துக்கு நன்றி..

   Delete
 5. மணி சொல்வது மிகச்சரி. இருந்தாலும்‍‍ ஒரு சிறிய வார்த்தைப் பிரயோகமும் மனதைப் புண்படுத்திவிடக் கூடாது என்ற உங்கள் எண்ணமும் மன்னிப்பு கேட்கிற அந்த ஈரமனசும்‌ எனக்குப் பிடிச்சிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா!

   Delete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!