Saturday 2 March 2013

என் ஆத்மாவின் கதறலாக இந்தப் பாடல்....


இவை பாடல்வரிகள் தான்... ஆனால் இன்றைய நாட்களில் எனக்குள் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கும் என் ஆத்மாவின் குரலாக இருக்கின்றது. என் உணர்வுகளின் சேமிப்பிடமான இந்த வலைப்பூ இதையும் சுமக்கட்டுமே எனப் பதிவு செய்கிறேன்....





சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேதம் கேட்டேன்
ரகசியம் இல்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக்  கண்ணீர் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்
வயதுக்கு சரியான வாழ்க்கை கேட்டேன்

இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத போகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்

நிலவில் நனையும் சோலை கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளிகேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பரிக்க விண் மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக் கெல்லாம் தாய் மொழி கேட்டேன்

உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்

எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய்க் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
 
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந் தலைமேல் மழையைக் கேட்டேன்
உள்ளங் காலில் நதியைக் கேட்டேன்

பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக் கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்

மலரில் ஒருநாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்க்க் கேட்டேன்
நிலவின் நதியில் குளிக்க்க் கேட்டேன்
நினைவில் சந்தணம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல்போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்

ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜ ராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக்  கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்

சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ளப் பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற தூய்மை கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போனற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேதம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்

காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்னத் தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்

தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
சாகும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய் மடி கேட்டேன்
கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்
குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்

படம்: அமர்க்களம்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா
வரிகள்: வைரமுத்து
இசை: பரத்வாஜ்

படங்கள்: கூகிள் தேடல்

13 comments:

  1. முன்பே கேட்டும் பார்த்தும் ரசித்த பாடல்தான். இங்கே உங்கள் தளத்தில் வரிகளைப் படிக்கையில் மனது மேலும் லயிக்கிறது. நல்ல பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. என் வலைப் பூவுக்கு வருகை தந்து, பாடலை மீண்டுமாக இரசித்து கருத்துரைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி அண்ணா.

      Delete
  2. முன்பே கேட்டும் பார்த்தும் ரசித்த பாடல்தான். என்றாலும் அத்தனை வரிகளும் தெரியாது. இங்கே படிக்கையில் மனதில் பதிகிறது. நல்லதொரு பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி அண்ணா

      Delete
  3. பூங்கோதை - சினிமா வேறு! வாழ்க்கை வேறு!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக மணி .. சினிமாவும் வாழ்க்கையும் வேறு. நான் இங்கே பாடல் வரிகளைத் தான் குறித்திருக்கிறேன். எனென்றால் இவை என் உணர்வுகளை வடிப்பதால் மட்டுமே. மிக்க நன்றி மணி உங்கள் கருத்திடலுக்கு ...

      Delete
  4. அருமையான பாடல் சகோதரி....
    எஸ்.பி.பி அவர்களின் குரலில்
    பாடல் கனகச்சிதமாக
    காதில் ரீங்காரமிட்டு ஒலிக்கும்....

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக சகோ. மனதை விறைக்க வைக்கும் வரிகள். தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி..

      Delete
  5. கோதை நீங்கள் ஏதோ மனவருத்தத்தில் இருக்கிறீர்கள். பாடல் நல்ல பாடல்தான். சோகம் வேண்டாமே!!!!!

    ReplyDelete
    Replies
    1. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை இருக்கு. இது ஒரு சிறிய தடுமாற்றம் மட்டும் தான். அதை வடிகால் அமைத்து வெளியில் விடும் ஒரு உத்தி தான் இது அண்ணா. வருகைக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி அண்ணா.

      Delete
  6. மீண்டும் மீண்டும் கேட்கத்தோணும் பாடல் அருமை .எல்லோருக்குமே பிடிக்கும்

    ReplyDelete
  7. சிறந்த பகிர்வு

    ReplyDelete
  8. Unmaiyaganey arumaiya varigal

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!