Tuesday 5 March 2013

சண்டியனுக்கோர் சாபம்……



குண்டரும் காடையரும்  கோலோச்சும்
சண்டியன் அரசுக்கோர் சாபம்
தொண்டை வரண்டு கதறிய போதிலும்
குண்டு மழை பொழிந்து அன்று
துண்டங்களான நம் தமிழ் மக்களின்
முண்டங்கள் மீது எழுந்து நின்றொரு
கண்டியக் கூத்து ஆடினையோ- எம்
மண்டையோட்டினைக் கொண்டு புவியிது
கண்டிடா மகுடம் தரித்தனையோ....

சுண்டைக் காய்களா நாமுனக்கு??
சண்டைக்கு அஞ்சி ஓடும்
சுண்டெலிகளாய் எண்ணினயோ??
அண்டை நாட்டின் அடிவருடிக்
கொண்டு வந்து வென்றவன் நீ-எனினும்
பண்டைத் தமிழ் பெரு வீரன் அன்றும்
மண்டியிடவில்லை உன் மடியில்- அவன்

கண்ட கடைக் குட்டியின் மார்பை
உண்ட உணவது செரிக்கும் முன் –உன்
குண்டுகள் துளைத்ததால் சாபம் பெற்றனை-இனி
வண்டமிழ் இனம் வாழும் வீரத்
தண்டமிழ் ஓர்மமாய் எழுந்து- வான்
மண்டலம் வரை ஓங்கும் - நீயோ

துண்டைத் துணியைத் தேடி அலைந்திட
முண்டாசுக் காரரும் கைவிட்டுப் போக
உண்ட உணவும்  பிரைக்கேற - உன்
சுண்டு விரல் கூட பீதியில் நடுங்கும்
திண்டாட்டம் ஆரம்பமாகும் - அதைக்
கொண்டாடக் காத்துள்ளோம்
சண்டித்தனம் காட்டும் அரசே… நீ சாபம் பெற்றிட்டாய்

30 comments:

  1. பழந்தமிழ் மறக்கவி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், நறுக்கான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  2. என்ன ஒரு அருமையான சொல்லாடல் !உண்மையைச் சொன்னீர்
    அதையும் ஊரறியச் சொன்னீர் நல்ல கவிதைகள் இது போல்
    எந்நாளும் தொடர வாழ்த்துக்கள் தோழி !....சண்டாள அரசு சாபம்
    பெற்றிருப்பான் இந்நேரம் .

    ReplyDelete
    Replies
    1. சாபம் நான் இட்டதில்லை.. அவனாகப் பெற்றுக் கொண்டது.. வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  3. திண்டாட்டம் ஆரம்பமாகும் - அதைக்
    கொண்டாடக் காத்துள்ளோம்.

    அருமையான சொல்லாடல் அற்புதச் சாடல் தொடருங்கள் தொடர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோதரி.. தொடர்வேன்.. நீங்களும் என்னோடு கூடப் பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடே..

      Delete
  4. ஃஃஃஃமுண்டாசுக் காரரும் கைவிட்டுப் போகஃஃஃஃ

    மறை பொருளில் வைத்தே ஒரு தேர்ந்த வார்த்தைக் கோர்ப்பு...
    அருமை அக்கா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி தம்பி!

      Delete
  5. 100 வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை 3 கொடித் துணையோடு சொல்லி விட்டீர்களே

    ReplyDelete
  6. கோதை! அருமையான கவிதை. அழகிய வீராவேசமான சொற்கள். தொடரட்டும்...

    சாபமிட்டனையோ மகளே
    சதிகாரர் அழிகவென்று
    சந்ததியை அழித்தோமென்று
    சதிராடுகின்றானென்று நீங்கிடாத
    வெஞ்சினம் மனத்தில் கொண்டு
    வெகுண்டெழுந்தே கவிவரைந்தாய்
    வீழும்நாள் விரைவில்வரும் அன்றுநாமும்
    ஊதுவோம் சங்கினை விண்ணதிரவேதான்.....

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக அம்மா...
      அந்தநாள் விரவில் வரும்... வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அம்மா..

      Delete
  7. சுண்டு விரல் கூட பீதியில் நடுங்கும்
    திண்டாட்டம் ஆரம்பமாகும் - அதைக்
    கொண்டாடக் காத்துள்ளோம்//
    உண்மைதான் நிச்சயம் நடக்கும்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அண்ணா.. உங்கள் நம்பிக்கையூட்டும் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா!

      Delete
  8. மதுவைக் குடித்ததுபோல் பூங்கொதை மாதுன்
    எதுகை அமைப்போ எழில்!

    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே!

      Delete
  9. என்ன ஒரு சீற்றம் பூங்கோதையின் கவிதையில்! இது நியாயமான சீற்றம்! அனைவரும் கொள்ள வேண்டிய சீற்றம்! நம் அனைவரின் சாபத்தையும் பெற்று அழியட்டும் அந்தச் சண்டாளர்கள்!

    ReplyDelete
    Replies
    1. என் சீற்றத்தை மெச்சியிருக்கிறீர்கள்...தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி அண்ணா!

      Delete
  10. சந்தம் மிகுந்த கவிவரிகள். பற்றியெழும் பெரும் தீயில் பிறந்து நிற்கிறது பெரும் சாபமொன்று...........அருமை அருமை

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி தம்பி... :)

      Delete
  11. உங்களுக்குள் உள்ள கவித்திறமையைக்கண்டு வியக்க வைக்கிறது அத்தனை வரிகளும். உணர்வுப்பூர்வமான வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி அண்ணா.. :)

      Delete
  12. பண்டைத் தமிழ் பெரு வீரன் அன்றும்
    மண்டியிடவில்லை உன் மடியில்// ம்ம்..

    ReplyDelete
    Replies
    1. ம்ம்... ம்ம்ம்... ம்ம்.. :))

      Delete
  13. வாள்வீச்சு போன்று
    வார்த்தைகள் வீரியமாய்
    விழி நுழைந்து
    நெஞ்சம் பரவிட்டது...

    அருமையான கவிதை சகோதரி...

    ReplyDelete
  14. உணர்வுமிக்க அருமையான கவிதை! உங்களின் பணி தொடர எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete

  15. மிக உணர்வுப்பூர்வமான கவிதை! சாபம் பளிக்கட்டும்! முகநூல் வழியே பார்த்து வந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிகவும் நன்றி சகோதரி. சில கவிதைகளை நான் முகநூலில் தவிர்த்துவிடுவதுண்டு. பின்னூட்டத்துக்கு மீண்டும் என் நன்றிகள் :))

      Delete
  16. கண்களில் வழியும் கண்ணீர் துளிகளை கரம் கொண்டு துடைக்க முடியவில்லை தோழி அத்தனையும் கவிதை இல்லை உண்மை ....

    ReplyDelete
  17. அருமையான கவிதை ...உங்களின் பணி தொடர எனது வாழ்த்துக்கள்..

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!