முதல் பகுதி வாசிக்காதவங்க நாமும் வேலைத்தளமும்- 1
http://poonka.blogspot.co.uk/2012/03/1.html வாசியுங்க.. அப்போ தான் தொடர் புரியும்.
கஞ்சி குடிப்பதற்கிலார் பகுதி- 1
“கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்”
மேலதிகாரி உங்கள் விடயத்தில் தொடர்ச்சியாகப் பொறுமையோடு இருந்தால் சக பணியாளர்களின் மனநிலை மாறுபடும்...உங்களை மேலதிகாரிக்கு வேண்டப்பட்டவராக எண்ணும் அல்லது உணர்ந்து கொள்ளும் அவர்களில் ஒரு சிலர் உங்களை விட்டு விலக ஆரம்பிப்பார்கள். காரணமில்லாமலே உங்களோடு முரண்படுவார்கள். மேலதிகாரி உங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அவர்களைக் குடைய ஆரம்பிக்கும். (ஏன் என்று யோசிக்கிறீர்களா?
எனக்கும் தெரியாது.. அது சிலரின் இயற்கையான குணம்... ஆனால் இப்படியானவர்கள் எங்கும் இருக்கிறார்கள். அதற்கு வேலைத்தளங்கள் விதிவிலக்கல்ல!!!..)
எனக்கும் தெரியாது.. அது சிலரின் இயற்கையான குணம்... ஆனால் இப்படியானவர்கள் எங்கும் இருக்கிறார்கள். அதற்கு வேலைத்தளங்கள் விதிவிலக்கல்ல!!!..)
இருவருமே(நீங்களும் உங்கள் மேலதிகாரியும்) ஆண்களாக அல்லது பெண்களாக இருந்தால், உங்களைப் பற்றி விமர்சிப்பதை விட- இருவருமே எதிர்ப்பாலினத்தவராக இருந்து விட்டால் விமர்சனம் தூள் பறக்கும்... கிட்டத்தட்ட உங்களை மென்று துப்பி விடுவார்கள்.. இது உங்கள் காதுகளுக்கெட்டாத வரை சந்தோசமே.. ஆனாலும் அதை உங்கள் காதில் போடவும் சிலர் இருப்பார்கள்... இப்பொழுது வேலைத்தளத்தில் உங்கள் சந்தோசம் கொஞ்சம் கரைய ஆரம்பிக்கும்...இருந்தாலும் வேலைக்குப் போகும் நேரம் மாறுபடா விட்டால் அடுத்த சோதனை ஆரம்பிக்கும்..(நாம் சலுகைகளாக இருந்தாலும், உபயோகிக்கும் பொருட்களாக இருந்தாலும் அதிகபட்சமாக உபயோகிப்பதில் கில்லாடிகள் ஆச்சே...)
இப்பொழுது தான் மேலதிகாரி தன் பங்குக்கு ஆரம்பிப்பார். அது வரை பொறுமையோடு இருந்தவர், என்றாவது ஒரு நாள் குழந்தைக்கு சுகவீனம், அல்லது ஏதவது இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் மிகவும் அவஸ்தைப் படும் ஒரு நாளில் உங்களைக் கூப்பிட்டுக் கண்டிப்பார். அப்பொழுது நீங்கள் மனமுடைந்து போவீர்கள். மேலதிகாரி திட்டாமல் தன்மையாகப் பேசியிருந்தாலும் கூட.. அன்றைய உங்கள் இக்கட்டான நிலையில் அவரது செயற்பாடு உங்களைக் காயப்படுத்தும். `என் நிலையைப் புரிந்து கொள்கிறார்கள் இல்லையே...என்று புழுங்க ஆரம்பிப்பீர்கள்... இந்த புலம்பல் ஆரம்பித்து விட்டால் உங்கள் வேலைத் தரம் சிதைவடைய ஆரம்பிக்கும்... இந்த நிலைமையை மோசமாக்கவென்று சில சக பணியாளர்கள் காத்திருப்பார்கள். தாமாக ஆறுதல் சொல்ல வருவார்கள். அப்படியே உங்கள் மனநிலையை இன்னும் மோசமாக்குவார்கள். இதற்கு மேல் சொல்லவே தேவையில்லை..
ஆக மொத்தம் இதற்கு ஆரம்பகர்த்தா நீங்கள் தான். ஆரம்பத்திலிருந்து நீங்கள் சலுகையை மதிப்பவராக, அதை துஸ்பிரயோகப்படுத்தாதவராக இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது அல்லவா?
இது
போலவே விடுப்பு எடுத்தல், அலுவலக நேரத்தில் உணவு உட்கொள்ளல், தொலைபேசி உபயோகித்தல்,
கொடுக்கப்படும் வேலைகளை சரியாக செய்து முடிக்காமல் விடுதல் போன்ற இன்னும் பல விடயங்களும்
அடங்கும்..
ஒரு
வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும் போதே நீங்கள் வேலைத்தளத்தைப் பற்றியும் அங்குள்ள நடைமுறைகளைப்
பற்றியும் சரியாக அறிந்து கொள்ள வேண்டியது உங்கள் முக்கியமான செயற்பாடுகளில் ஒன்று.
ஒரு
வேலைத் தளத்தில் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகள் எவை? உரிமைகள் எவை? என்பதைப்
பகுத்துணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக எமது கடமைகளை சரிவரச்
செய்வது மிக மிக அவசியம்...
குழு மனப்பான்மை (Team
Spirit)
தொழில்
புரியும் இடங்களில் நமக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்று- குழு மனப்பான்மை...பல சந்தர்ப்பங்களில் இதை நாம் தவற விட்டு விடுகிறோம். பொதுவாக வேலைத்தளத்தில் மட்டுமன்றி
எந்த செயற்பாடாக இருந்தாலும் (கல்வி, ஆன்மீகம், சமூகத் தொண்டு போன்ற செயற்பாடுகளிலும்
கூட..) இந்த உணர்வு எமக்கு இருக்க வேண்டும்.
குழு
மனப்பான்மை நமக்குள் இருக்கிறதா என நாம் சிந்தித்துப் பார்த்தால்...
தொடரும்...
இது வரைக்கும் வந்திட்டீங்க... கீழே உங்க கருத்தையும் சொல்லிட்டு போகலாமில்ல??
Tweet | |||
No comments:
Post a Comment
இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!