Friday, 9 March 2012

புரியாத நண்பனுக்கு...


புரியாத நண்பனுக்கு...
புரியப்படாத.. நீ பிரியப்படாத தோழி எழுதுவது..
தரியாத வாழ்வில் உன் போல் சில
புரியாதோர் சந்திப்பு..என்
பரிசாய் கிடைக்கின்றன...
நான் பெற்ற வரம்..எங்கும்
நல்ல பெயர் பெற்றதில்லை
நாலுபேர் வாழ்த்தினால்
நாற்பது பேர் தூற்றுவர்-இதற்கு
நீ மட்டுமென்ன விதி விலக்கா?
     
உன் மௌனம் என்னை உடைக்கவில்லை
புரியாமை ஒன்றும் புதிதல்ல-ஆனால் உன்
அறியாமை எண்ணி வருந்துகிறேன்...
கண்ணால் காண்பதே பொய்யாகும் உலகில்
கண்டவரும் பேசுவதை நம்பினாய்
பரிகளைக் கூடக் கரியென்று சொல்லும்
நரிகளின் தந்திரம் நீயறியாய்..
திரித்துப் பல கதைகள்
திரி கொண்டு மூட்டுவர்- அதை
சரியென்று நீயே முடிவெடுப்பாய்..
நண்பா...
ஞானம் உனக்கிருப்பின் கொஞ்சம்
தீர விசாரிப்பாய்...
காலம் பதில் சொல்லும் என்றெண்ணி-இந்த
ஞாலம் படைத்தோனிடம் கையளித்தேன்-
ஒரு வேளை அப்போது..
காலம் கடந்திருக்கும்..

3 comments:

  1. அக்கா புரியாத மனிதர்கள் புரிவதட்கு காலம்தான் பதில் சொல்லும்..... அக்கா konjam wait panunko.......

    ReplyDelete
  2. உண்மைதான்.. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

    நன்றி சுருதிரவி மற்றும் ருபேட்
    தொடர்ந்து என் படைப்புகளைப் பார்த்து கருத்துக்களைத் தெரிவியுங்கள்..

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!