Sunday, 25 March 2012

நாமும் வேலைத்தளமும்- 3


முதல் பகுதி வாசிக்காதவங்க 

http://poonka.blogspot.co.uk/2012/03/1.html  நாமும் வேலைத்தளமும்- 1

 http://poonka.blogspot.co.uk/2012/03/2.html நாமும் வேலைத்தளமும்- 2


வாசியுங்க.. அப்போ தான் தொடர் புரியும்.

கஞ்சி குடிப்பதற்கிலார் பகுதி- 1


கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்

எம்மில் பலருக்கு பெரும்பாலும் குழு மனப்பான்மை இல்லாமல் போய் விடுகிறது. தொழில் தளத்தில் நாம் ஒரு குடும்பம் போல செயற்பட வேண்டும். (இதை தப்பா புரிஞ்சுகொண்டு சக தொழிலாளியின் குடும்ப விசயத்தில் மூக்கை நுழைக்காதீங்கப்பா...). குழு மனப்பான்மை என்பது நாம் இணைந்து வேலை செய்பவர்கள் என்பதை எப்பொழுதும் நினைவிற் கொள்ளல்.
நீங்கள் எவ்வளவு முக்கியத்துவமான பணி செய்பவராக இருந்தாலும், அந்த தொழில் தளம் ஒவ்வொருவருடைய உழைப்பிலேயுமே இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அடுத்தவரின் வேலையில் சிக்கல்கள், சுமைகள் ஏற்படும் போது முடிந்தால் (அது உங்களுக்கு தெரிந்த வேலையாக இருந்தால்) உதவி செய்யலாம். இது உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை மற்றவர்கள் மத்தியில் உருவாக்கும். இயன்ற வரை உங்கள் வேலையைப் பற்றி மட்டும் மற்றவர்களுடன் பேசுங்கள். மற்றவர்களுடைய வேலையைப் பற்றியோ அல்லது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியோ அவர் அல்லாத இன்னொருவருடன் பேசுவதைத் தவிருங்கள். உங்களால் விமர்சிக்கப்படுகின்ற X,Y,Z என்ற நபர்களும் உங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். ஒற்றுமை உங்கள் குழுவிற்கு பலமாக இருக்கும்.
உங்கள் குழுவில் உள்ளவர்களின் சிறு சிறு குறைகளை பெரிது படுத்தாதீர்கள். முடிந்தால் அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய உதவுங்கள். அல்லது அதை பொருட்படுத்தாமல் விட்டு விடுங்கள். சின்ன சின்ன பிரச்சனைகளையும் மேலதிகாரிகளிடம் முறையிடாதீர்கள். இச்செயல் உங்களை மன முதிர்ச்சி அற்றவராக மற்றவர்களை எண்ண வைக்கும்.
எனவே கடமை உணர்வு, குழு மனப்பான்மை என்பன நமது வேலைத்தளங்களில் நமக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்புகளாக இருக்கின்றன.
இத்தனையும் நாம் கடைப்பிடித்தாலே  நாம் எமது வேலைத்தளத்தில் நல்ல சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது என் சிறிய மூளைக்கு எட்டிய கருத்து... நீங்க என்ன சொல்றீங்க???...(அப்பாடா... ஒரு மாதிரி இழுத்தடிச்சு.. முடிச்சிட்டன்)
-முற்றும்-


இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

1 comment:

  1. Seems good, I would appreciate Manager's to read this further i.e those who manage staff in the workforce!!PAMS

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!