Tuesday 3 November 2009

எப்போதும் என் இனியவனே

அன்புக்கு இலக்கணமாய்- என்

அகராதியில் இருப்பவனே
பதறிப் போன பொழுதெல்லாம்
பக்கமிருந்து பகிர்ந்தவனே
நம்பிக்கையிழந்த போதெல்லாம்- எனை
நிமிர்ந்து எழ வைத்தவனே- என்

நண்பர்களையும் அன்பர்களையும்
தன்னவராய் ஏற்பவனே
நம்பிக்கையின் முழு வடிவாய்
நாள்தோறும் திகழ்பவனே
காலத்தின் கடூரத்திலெல்லாம்
கண்ணிமையாய் காத்தவனே..
காதலித்த போது மட்டுமன்றி
கரம் பிடித்த பின்னாலும்
காதலின் சுவையுணர வைப்பவனே..
பெண்ணடிமைத் தனம் எதிர்த்து
பேசுகின்ற பெண்ணாயினும்
களங்கமற்ற உன் பாதம்
கண்ணிலொற்றல் தகுமென்று
கண்ணாளா உன்சார்பாய்
களமாட முன்வருவேன்
எப்போதும் என் இனியவனே
எனைப் புரிந்து நடப்பவனே...
நீயே என் துணைவன்..
நீ போதும் என் வாழ்வை
நித்தமும் பசுமையாக்க...

4 comments:

  1. //கரம் பிடித்த பின்னாலும்
    காதலின் சுவையுணர வைப்பவனே//

    ரசித்த வரிகள்! அருமை!!

    ReplyDelete
  2. அன்பு அக்கா
    நட்புக்கு நன்றி
    நல்ல கவிதைக்கு நன்றி
    சொல்லுக்கு நன்றி

    ReplyDelete
  3. யாதவா.. உங்கள் கருத்துக்களே என் எழுத்தின் அடியுரம் அன்புக்கு நன்றிகள்

    ReplyDelete
  4. நன்றி கலையரசன். தொடர்ந்தும் என் கவிதைகளை வாசித்து குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள்... என் வளர்ச்சிக்காக...

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!