Thursday, 19 November 2009

சாக்கடை



சாக்கடைச் சமூகமே என்னைச்
சீர்தூக்க நீ யார்?
சாதனைகள் செய்த போது
சத்தமின்றி இருந்தாயே
வேதனை மட்டுமென்ன நீ தரும்
வேதனமா தலையாட்டி நான் வாங்க??
எனக்குத் தெரியும்- நான்
காட்டிய அமைதி உனக்குள்
காட்டுத்தீயாய் எரிந்திருக்கும்
என் சிரிப்பு உன் நெஞ்சில்
பொறாமைத் தீயாய் பற்றியிருக்கும்
என் திறமைகள் உன்னைத்
திண்டாட வைத்திருக்கும்-உன்
சாக்கடை நெஞ்சுக்குள் என் நினைவு
சந்தணமாகவா கமழும்!!?
அதனால் தான் என்னைக்
களங்கப் படுத்த முனைகிறாய்- என்
கற்பை மதிப்பீடு செய்
நீ கண்ணகியாய் இருந்தால் மட்டும்
கவிழ்த்து விடலாம் என்று எண்ணாதே நான்
கவரி மானாய் மாய்பவள் அல்ல
நீறு பூத்த நெருப்பு...
நினையாத நேரத்தில் வெகுண்டெழுந்து
கருக்கி விடுவேன் உன் தீ எண்ணத்தை

6 comments:

  1. தீ பறக்குது சகோதரி வார்த்தைகளில்

    "வேதனமா" என்ன அப்பிடின்னு எனக்கு தெரியலை

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  2. மிகவும் அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    http://tamilparks.50webs.com

    ReplyDelete
  3. நன்றி விஜய்,
    'வேதனம்' என்பது சம்பளம் அல்லது ஊதியம் என்று பொருள் படும்.
    நன்றி தமிழ் தோட்டம்,
    தங்கள் தமிழ் தோட்டத்தில் என் கவிச் செடிகளையும் நாட்ட விரும்புகிறேன். ஆனால் வழிமுறை தெரியவில்லை. வழிநடத்தமுடியுமா?

    அத்துடன் என் சகோதரியின் மகள் 13 வயதுச் சிறுமியின் பிளாக்கரையும் பாருங்கள். வளரும் கவிஞர்களை ஊக்குவியுங்கள் http://kaviyaakavithaikal.blogspot.com/

    ReplyDelete
  4. //உன்
    சாக்கடை நெஞ்சுக்குள் என் நினைவு
    சந்தணமாகவா கமழும்!!? //

    அனல் கக்கும் வரிகளில் மிக அழுத்தமான வார்த்தைகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்களுக்கு நன்றி ரோஸ்விக். தொடர்ந்து என் கவிதைகளை வாசியுங்கள், ஊக்குவியுங்கள்.

    ReplyDelete
  6. அக்கா கவிதை அருமை, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!