Wednesday, 11 November 2009

நிலா

எப்போதும் சிரிக்கிறாய் நான்
அழும் போது கூட- ஓ..
பல்லாயிரம் பேரின் வேதனையை
பலகோடி மைல்களுக்கப்பாலிருந்து
பார்த்ததனால் ஏற்பட்ட விரக்தியா…
குளிர்மையாய் தோன்றுகிறாயே…
குமுறுகின்ற உள்ளங்களைத் தேற்றவா…
உன்னால் முடியாது
இந்தக் குமுறல்கள்….
எரிமலையை வென்றவை
உணர்வுகளைச் சாம்பலாக்கி
உயிருக்குள் தெளிப்பவை…
அதனால்தான் நீ அருகிலேயே வரவில்லையோ???

8 comments:

  1. ஏக்கம் என்பது தமிழர்களோடு கூடப்பிறந்தது.

    ReplyDelete
  2. எரிந்து விழுவதும்
    மீண்டு எழுவதும்
    புதிதல்ல

    அவன் தமிழன் எனும்
    பீனிக்ஸ் பறவை

    ReplyDelete
  3. கவிதை நன்றாகவுள்ளது.

    ReplyDelete
  4. கருத்துக்களுக்கு நன்றி சந்ரு.. அகல் விளக்கு..
    அந்த ஏக்கமே எம்மை எழ வைக்கிறது..

    ReplyDelete
  5. நல்ல கவிதை. வலி நிறைந்தது.....word verification எடுத்து விடுங்கள்.

    ReplyDelete
  6. வலி நிறைந்த வார்த்தைகள்

    -நேசமித்ரன்

    nesamithran.blogspot.com

    ReplyDelete
  7. naraaka ulathu. Thodarunkal unkal padaippukalai

    ReplyDelete
  8. நிலவுக்கு உந்மேல் ஏனடி கோவம்

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!