Tuesday 3 November 2009

அந்தரங்கம்

அதிகாலை வேளையிலும்
அணைத்தபடி சிறு தூக்கம்
அதிராது மெல்லத் தட்டி
“எழும்புங்கோ விடிஞ்சாச்சு”
அன்பான கட்டளை…
வேளைக்கு வேளை பரஸ்பரம்
உண்மையான உபசரிப்பு…
என்ன சாப்பாடு… என்ன குடிக்கலாம்…
களைப்பாயிருக்கா… ஓய்வெடுக்கலாமா…
அடுத்த செயற்பாடு என்ன…
எப்படி செய்யலாம்…
நடந்து போகலாமா.. பஸ்ஸா ஆட்டோவா..
என்ன பொருள் வாங்கலாம்…
எந்தக் கடையில் வாங்கலாம்…
பிடிச்சிருக்கா…பணம் போதுமா…
சின்னச்சின்ன தீர்மானங்கள்
பரிச்சயமற்ற முகங்களின் நடுவே
சங்கடங்கள் ஏதுமின்றி
கரம்பற்றி வீதியிலே
மெல்ல நடைபோட்டு...
களைத்துப் போய் ஓயும்போது
மடி மீது தலை வைத்து
விழி மூடும் போது..
நெற்றியில் புரண்ட முடியை
நாசூக்காய் ஒதுக்கி விட்டு…
புரிந்தது….
உன்னோடு தனிமை எத்தனை சுகம்…
கூட்டு வாழ்க்கையில் பறிபோன
அந்தரங்கம் இதுதானோ…

5 comments:

  1. உங்கள் கவிதையை வாசித்து ஜோசிகும் போது எனக்கு ஒரு கவிதை பிறக்கிறது நன்றி கவிதையின் பிறபிடமே

    ReplyDelete
  2. உங்கள் கவிதையை வாசித்து ஜோசிகும் போது எனக்கு ஒரு கவிதை பிறக்கிறது நன்றி கவிதையின் பிறபிடமே

    ReplyDelete
  3. யாதவா.. உங்கள் கருத்துக்களே என் எழுத்தின் அடியுரம் அன்புக்கு நன்றிகள்

    ReplyDelete
  4. அருமையாக இருக்கு பூங்கோதை
    தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்லா இருக்கு :)

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!